எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?

Published On:

| By Balaji

திருச்சி திமுக அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலை திறப்பு நிகழ்வும் அதைத் தொடர்ந்து தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டமும் திருச்சியில் நேற்று (ஜூன் 10) நடைபெற்றது.

நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மேடையில் இருந்த அனைவரையும் பெயர் குறிப்பிட்டு வழக்கம்போலவே அழைத்தார். அதில் தம்பி உதயநிதி அவர்களே என்றும் பெயர் குறிப்பிட்டு அழைத்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,

**”திருச்சி திமுகவின் கோட்டை. அன்பில் தர்மலிங்கத்தை பொல்லாதவர் என்று கலைஞர் சொல்லுவார். இப்போதைய மாவட்டச் செயலாளர் கே.என். நேருவும் பொல்லாதவர்தான்.**

**அன்பிலுக்கும் நேருவுக்கும் வித்தியாசம் உண்டு. அன்பில் நேருவைப் போல கோபப்படமாட்டார். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசமாட்டார். ஆனாலும் நேரு கோபப்பட்டு, என்னதான் வார்த்தைகளைப் பேசினாலும் அடுத்த நொடியே தோளில் கை போட்டு, அரவணைத்து பேச ஆரம்பிப்பார். இந்தக் கலையை நேருவிடம் மட்டுமே நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அன்பிலுக்கு அடுத்தபடியாக திருச்சியை திராவிட முன்னேற்றக் கழக தீரர்களின் கோட்டையாக வைத்திருப்பது நேருதான்” என்று கே.என். நேருவை புகழ்ந்தார்.**

**தொடர்ந்து, “அன்பிலாருக்கும் கலைஞருக்கும் இடையே நட்பில் சில சில வருத்தங்களும் வந்து போகும். இருவருக்கும் இடையிலான பிணக்கு கணவன் மனைவி பிரச்சினை போன்றது என்று பேராசிரியர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அண்ணா அன்பில் என்று கூட அழைக்கமாட்டார். செல்லமாக அம்பில் என்றே அழைப்பார்.**

இந்த 38 தொகுதிகளின் வெற்றிக்கு ஸ்டாலின் மட்டும் காரணம் அல்ல. நாம் எல்லோரும் தான். இந்த வெற்றியை வர இருக்கக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற சூளுரை மேற்கொள்ளும் கூட்டமாக இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

சில குருவிக் கூட்டம் நம்மை பொய் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று சொல்கிறது. மோடி உண்மைப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றுவிட்டாரா? நாம் பொய் பிரச்சாரம் செய்ய தமிழக மக்கள் என்ன முட்டாள்களா?

நாங்கள் நாடாளுமன்றத்தில் என்ன செய்யப் போகிறோம் என்று கேட்கிறார்கள்? ஏற்கனவே இருந்த 37 பேரும் ஜடம் போல அடிமையாக இருந்தீர்களே அதுபோல இருக்க மாட்டோம். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று செயல்படுவோம்.

மூன்றாவது மொழி என்று இந்தியை திணிக்க முற்பட்டதைத் தடுத்தது திமுகவின் கடுமையான எதிர்ப்புதான். காவிரி ஆணையத்தை கர்நாடக ஆணையமாக மாற்றியது பாஜக. பாஜக 5 சீட்டுகள் பெற்றும் தோற்றது ஏன்? தமிழக விரோதப் போக்கால்தான்.

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் திறக்கவில்லை. இதுபற்றி தமிழக முதல்வர் என்ன செய்தார்? கர்நாடக முதல்வரிடம் பேசினாரா, அங்கிருக்கும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டாரா? அதிகாரிகளையாவது அனுப்பினாரா? மத்திய அரசிடமாவது வற்புறுத்தினாரா?

எட்டு வழிச் சாலை விவகாரத்தில் காட்டக் கூடிய அவசரம், ஆர்வத்தை காவிரியில் காட்ட மாட்டார். ஏன், எட்டுவழிச் சாலை வந்தால்தான் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரும். காவிரி நீர் வந்தா கமிஷன் வராதே என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். காவிரி டெல்டா விவசாயிகள் பணம் வசூல் செய்து கொடுத்தால் அதை கவனிப்பீர்களோ என்னமோ தெரியவில்லை. பணத்தைத் தவிர வேறு எந்த கொள்கையும் இல்லாத ஆட்சி.

நீட் மாணவிகள் தற்கொலைக்குக் காரணமே மத்திய மாநில அரசுகள்தான். இத்தகைய கொலை பாதக அரசுகளுக்கு பாடம் புகட்டத் தயாராகுங்கள்” என்று பேசினார் ஸ்டாலின்.

**

மேலும் படிக்க

**

**

[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)

**

**

[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)

**

**

[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)

**

**

[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel