எடப்பாடி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன: வைகோ

Published On:

| By Balaji

ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றதையடுத்து, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துவருகின்றனர். ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்ற மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 5,63,591 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று (மே 25) கணேசமூர்த்தியுடன் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “இந்தியா அளவில் ஸ்டாலினின் மதிப்பு மிகப்பெரிய அளவு உயர்ந்திருக்கிறது. தமிழர்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்கும் என்று திமுகவை தமிழகத்தின் மக்கள் நம்புகிறார்கள். திமுகவை பிற மாநிலத்தவர் பிரமிப்புடன் பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களை வென்றுள்ள நிலையில், ஒரு சில சட்டமன்ற தொகுதிகளில் வென்றிருந்தாலும் ஆட்சியில் நீடிக்கக் கூடிய தார்மீக உரிமையை எடப்பாடி பழனிசாமி இழந்துவிட்டார். ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரதிபலிப்பையே நான் எதிரொலிக்கிறேன். எப்படியிருந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்கும் நாள் எது என்பதை வருங்காலம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/24/93)

**

.

**

[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)

**

.

**

[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)

**

.

**

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share