ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

public

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் இந்த நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதில் முதற்கட்டமாக ரூ.24,433 கோடி நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்துள்ளது. இந்த நிதியை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பணிகளுக்கும், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் பணிகளுக்கும் பயன்படுத்த மத்திய அரசு அளித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் வறட்சி பாதித்த தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் கூடுதலாக 50 நாள்கள் வேலை வழங்கவும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. தேசிய நீர்வள நிர்வகிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடுதலாக 65 சதவிகித நிதியை மாநில அரசுகள் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டில் இந்தியாவின் சில மாநிலங்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டன. தற்போது 2017ஆம் ஆண்டிலும் சில மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் சில மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில் ஓரளவு மழை பெய்த போதும் மார்ச் மாதத்திலிருந்து நிலவும் கடுமையான வெயிலால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் மத்திய அரசின் நிதியுதவி வறட்சியைச் சமாளிக்க ஓரளவுக்குப் பயன்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *