புலந்த்சார் வன்முறையில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், மூன்று வாரங்களுக்குப் பிறகு அவரைத் துப்பாக்கியால் சுட்டவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது உத்தரப் பிரதேச காவல் துறை.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சார் மாவட்டத்திலுள்ள சிங்ராவதி பகுதியில் பசுக்கள் கொல்லப்பட்டதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட திடீர் வன்முறையை அடுத்து, காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் தலைமையிலான போலீசார் அதனைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமித் குமார் என்ற வாலிபர் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, அந்த கும்பல் சுபோத் குமாரைத் தாக்கியது. அதன் பின்னர், அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது அம்மாநிலத்தில் பெரிய அதிர்வை உண்டாக்கியது. இவ்வழக்கில் ஜிதேந்திர மாலிக் என்ற ராணுவ வீரரைக் கைது செய்தனர் உ.பி. போலீசார். இந்த கொலை தொடர்பாக பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த யோகேஷ் ராஜ் முதல் குற்றவாளி என்று குற்றம்சாட்டினர் போலீசார்.
இந்த நிலையில், பிரசாந்த் நாத் என்ற டாக்சி டிரைவர் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கைச் சுட்டுக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். சுபோத் குமாரை சுட்டுக்கொன்றது நான் தான் என்று அவர் வாக்குமூலம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
�,”