உள்ளாட்சி: தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு!

Published On:

| By Balaji

உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்துள்ளார்.

2011ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகள் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த கோரி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 15ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, உள்ளாட்சித் தேர்தல் நடத்த அக்டோபர் 31 வரை கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டிருந்தது.

இதற்கிடையே ஜூலை 17ஆம் தேதி சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் வேலுமணி உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 19) தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை டிசம்பர் வரை நீட்டித்து, அதற்கான சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு திமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

**

மேலும் படிக்க

**

**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share