உலககெங்கிலும் உள்ள மக்களை கண்ணீர் வடிக்க வைத்திருக்கிறது தாய்லாந்தில் ஆறு யானைகள் மலை உச்சியில் இருந்து நீர் வீழ்ச்சியில் விழுந்து இறந்த சம்பவம். மூன்று வயதான குட்டி யானையைத் தேடிச் சென்று அந்த ஆறு யானைகளும் நீர் வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்துவிட்டன.
தாய்லாந்து நாட்டிலுள்ள காவோ யாய் தேசிய பூங்காவில்தான் இந்தச் சம்பவம் அக்டோபர் 5 ஆம் தேதி நடந்திருக்கிறது. இந்தப் பூங்காவை தாய்லாந்து நாட்டின் வனத்துறை பாதுகாத்து வருகிறது. அந்நாட்டில் மொத்தமுள்ள 1700 யானைகளில் 170க்கும் மேற்பட்ட யானைகள் இந்த தேசியப் பூங்காவில் இருப்பதால் தாய்லாந்து அரசு இதில் முக்கிய கவனம் எடுத்து வருகிறது.
இந்த வனத்துக்குள் ‘ஹாய் நரோக் என்ற நீர் வீழ்ச்சி அமைந்திருக்கிறது. இதன் சுற்று வட்டாரத்தில் அதிக யானைகள் நடமாட்டம் இருக்கின்றன. அங்கு 2 யானைகள் நீண்ட நேரமாக பாறைகளின் நடுவே சிக்கி தவித்துவந்தது தெரிய வந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் காலையில் ரோந்து பணியின் போதுதான், பள்ளத்தில் விழுந்து6 யானைகள் இறந்துகிடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ந்துபோன பாதுகாப்பு காவலர்கள் உடல் சிதறி உயிரிழந்த யானைகளை ஒவ்வொன்றாக மேலே எடுத்துவந்தனர். பலர் கண்ணீர் மல்க யானைகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
வனத்திற்குள் இருந்த 3வயது குட்டி யானை தவறி நீர்வீழ்ச்சிக்குள் விழுந்திருக்கக் கூடும் என்றும் அதனைக் காப்பாற்ற மற்ற யானைகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று உள்ளே விழுந்து இறந்திருக்கலாம் என்றும் வனத்துறை அதிகாரிகள் சொல்கின்றனர்.
�,”