உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: தீபா புகார்!

public

தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபா பேரவை என்ற அமைப்பைத் தனியாக நடத்தி வருகிறார். சமீபத்தில் தனது கார் டிரைவரான ராஜாவை பேரவையிலிருந்து நீக்கிய தீபா, தற்போது மீண்டும் பேரவையில் இணைத்துள்ளார். அவருக்கு தலைமை நிலைய மாநிலச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று (பிப்ரவரி 2) சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த தீபா, தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தொலைபேசி மூலம் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் என்னை மிரட்டுக்கின்றனர். என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்த ஏற்பாடு செய்தேன். அதனைத் தடுக்கும் விதமாக என்னுடைய முகநூல் பக்கத்திலேயே, தினகரன் ஆதரவாளர்கள் அவதூறு பரப்புகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறினார்.

மேலும் அவர், எனது அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் தனக்கு தொல்லை கொடுக்கின்றனர். எனது கணவர் மாதவன் பெயரில் போலியாக சிலர் போலீசில் புகார் அளித்துள்ளனர்” என்றும் குற்றம் சாட்டினார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *