விலையேற்றம் காரணமாக இந்த ஆண்டில் தங்கத்துக்கான தேவை 10 சதவிகிதம் வரையில் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தங்கம் விலையேற்றம் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்கத்தில் அதிகம் செலவிடத் தயங்குகின்றனர். இந்த ஆண்டு பண்டிகை சீசனிலும் தங்கம் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போதைய நிலையில் சென்னையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.35,170 ஆக இருக்கிறது. விலை உயர்வு காரணமாகத் தங்கம் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று அனைத்திந்திய நகை மற்றும் ரத்தினங்கள் கவுன்சில் தலைவரான அனந்த பத்மநாபன் *ராய்டர்ஸ்* செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தங்கம் நுகர்வு அல்லது பயன்பாட்டைப் பொறுத்தவரையில், 2018ஆம் ஆண்டில் 1.5 சதவிகித உயர்வுடன் 760.4 டன்னாக இருந்தது. இது தங்கம் பயன்பாட்டின் பத்து ஆண்டு சராசரியான 838 டன்னை விட மிகவும் குறைவாகும். இந்த 2019ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் பயன்பாடு முந்தைய மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சரிவைச் சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் 2019ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்துக்கான தேவை 750 முதல் 850 டன் வரையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய விலையேற்றம் காரணமாகத் தங்கம் பயன்பாடு குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை உயர்வு காரணமாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய தங்கம் நுகர்வோராக உள்ள இந்தியா தனது இறக்குமதியைக் குறைத்துக்கொண்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[சபரீசன் பேச்சு: சிக்கிய ஆடியோ!](https://minnambalam.com/k/2019/06/26/26)**
**[திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/26/18)**
**[டிஜிட்டல் திண்ணை: தங்கம் -தினகரன்: உறவை உடைத்த அந்த ஒரு வார்த்தை!](https://minnambalam.com/k/2019/06/25/89)**
**[சர்ச்சைக்குரிய விளம்பரம்: கோவை விடுதிக்கு சீல்!](https://minnambalam.com/k/2019/06/26/23)**
**[திமுக -காங்கிரஸ் உரசல்: ப.சிதம்பரம் தலையீடு!](https://minnambalam.com/k/2019/06/24/69)**
�,”