உண்மையைச் சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

தூத்துக்குடிக்கு அமித் ஷா வந்துருக்காரே எப்படியும் எச்.ராஜா டிரான்ஸ்லேட் பண்ணுவார், இன்னைக்கு கன்டண்ட் உஷார் பண்ணிடலாம்னு பார்த்தா அவர் உஷாராகி எஸ்கேப் ஆகிட்டாரு. யாரோ ஒரு புது ஆளை டிரான்ஸ்லேட் பண்ண போட்ருக்காங்க. சரி அவர் என்ன பேசுறாருன்னு கேட்கலாம்னு பார்த்தா அமித் ஷா பேசுறதை மட்டும் காட்டி டிவியில கட் பண்ணிட்டாங்க. விசாரிச்சப்ப அடுத்த ஆட்சி அமைஞ்ச உடனே ஏழைகளுக்கான ஆட்சியா அது இருக்கும்னு சொல்லியிருக்காராம். எப்படியோ அவரே அவர் வாயால இந்த ஆட்சி பணக்காரர்களுக்கானதுன்னு ஒத்துகிட்டாரேன்னு நண்பர் ஒருத்தர் சொன்னாரு. தமிழிசை வேற புல்லட் ரயில் விடப்போறதா தூத்துக்குடியில சொல்லியிருக்காங்க. ஏற்கெனவே அங்க இவங்க கொடுத்த புல்லட்டுக்கே இன்னும் விடை தெரியாம இருக்கு.. ஒரு படத்துல வடிவேலு தங்கச்சியை கல்யாணம் பண்ண மாட்டேன்னு செந்திலும், கவுண்டமணியும் மாறிமாறி அவங்களைப் பத்தி அவங்களே கிளிச்சுக்குவாங்களே அது மாதிரி இருக்கு.. உண்மையைச் சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்னு சொல்வாங்க.. மக்கள் எந்த தெய்வத்தை தேர்ந்தெடுக்குறாங்கன்னு யார் கண்டா, அப்டேட்டை பாருங்க

**@Kozhiyaar**

எங்க இருந்து பிடிச்சுட்டு வராங்கன்னு தெரியாத ஃகேன் தண்ணிய‌ குடிக்கிறதுக்கு,

கண்ணுக்கு முன்னாடி தெரியுற கார்ப்பரேஷன் தண்ணியை காய வைச்சு குடிச்சிடலாம்!!!

**@madurai_jinna**

என்னய்யா இது.?

நெடுஞ்சாலையில வச்சு

ஆபரேஷன் பண்றீங்க.?

அது பை-பாஸ் சர்ஜரிங்க.!”

**@Kozhiyaar**

துக்கத்தை விட மகிழ்ச்சியே அதிக தூக்கமின்மையை தரவல்லது!!

**@oorkkavalaan**

தோல்வியை “தழுவினார்” என்பது தோல்விக்கு ஒரு ஆறுதல்….

**@sajinitta**

பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ததால் அதிமுகவினர் மீது சோடாபாட்டில் வீச்சு

// தாயில்லாத புள்ளைங்கனதும் ஆளாளுக்கு இழுத்து போட்டு அடிக்கானுவ

**@nandhu_twitts**

“இதுக்கு மேல சொல்றக்கு ஒன்னுமில்லை”னு சொல்லிட்டு விடாம மணிக்கணக்கா பேசிட்டு இருப்பாங்க சிலர்..!!

**@Annaiinpillai**

மோட்டு பட்லுக்கும் ஷோட்டா பீமுக்கும் சண்டை அத ஊரே பாக்குதுனு வீட்டுக்குள்ளேயே

சுட்டி டிவியை ஒபன் பண்ணிடுவது சுட்டிஸ்களின் டிசைன்!

**@Thaadikkaran**

ஒருத்தர் வேகமா அரக்க பறக்க நடந்து வந்தாரு, நானும் அவருக்கு ஏதோ அவசரம் போலேன்னு நினைச்சா நேரே என்கிட்ட வந்து வாட்ச் பார்த்திட்டு ‘பாஸ், இங்க பக்கத்துல டாஸ்மாக் எங்க இருக்குன்னு கேக்குறாபிடி’

**@Kozhiyaar**

தப்பு பண்ணிட்டா செருப்பால நாலு அடி கூட‌ அடிச்சிக்கோங்கடா,

கருமம் புடிச்ச அறிவுரை மட்டும் சொல்லாதீங்க!!

**@Annaiinpillai**

“தேமுதிக தலைவரை பகைத்து கொண்டால் என்னவாகும் என்பதற்கு துரைமுருகனே சாட்சி!” – விஜயபிரபாகரன்# எனக்கு டிரம்ப தெரியும் ஆனா அவருக்கு என்ன தெரியாது மொமென்ட்?!

**@yaar_ni**

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் – ராகுல் காந்தி வாக்குறுதி

பையன் பாயிண்ட்ட புடிச்சிட்டான்

**@krishnaskyblue**

தமிழக வாழ்வாதார பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம்: அன்புமணி ராமதாஸ்

//போன மாசம் வரைக்கும் அதிமுக தான் காரணம்ன்னு சொன்னீங்க சின்னையா ???

அது போன மாசம் நான் சொல்லுறது இது இந்த மாசம்

**@vananm41**

கோவில் திருவிழா பாட்டுக் கச்சேரியில் சொப்பன சுந்தரி நான்தானே பாட்டு பாடுறதுலாம் அந்த மாரியம்மனுக்கே பொறுக்காதுடா டேய்

**@Kozhiyaar**

நாம‌ எதை சொன்னாலும் நம்புவது அம்மா,

எப்படி சொன்னாலும் நம்பாதது வீட்டம்மா!!!

**@kathir_twits**

“தேமுதிக தலைவரை பகைத்து கொண்டால் என்னவாகும் என்பதற்கு துரைமுருகனே சாட்சி!” – விஜயபிரபாகரன்

வருமான வரித்துறை அப்பாவோட ஷூட்டிங் வந்த குரூப்னு நினைச்சிட்டார் போல

**@parveenyunus**

யோகப்பயிற்சி செய்தால் சக்திகள் கிடைக்கும்- ரஜினிகாந்த் #

ஆனா..அரசியல் கட்சி ஆரம்பிக்கிற சக்தி மட்டும் கிடைக்காது போல..!

**@parveenyunus**

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தந்தது திமுக தான், ஆனால் இன்று அதற்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள் – அன்புமணி #

அதிமுக அமைச்சர்களை பத்தி கவர்னர் கிட்ட ஊழல் புகார் குடுத்துட்டு, இப்ப அதே அதிமுகவோட நீங்க கூட்டணி வச்சிருக்கற மாதிரியா..?

**@Annaiinpillai**

5 ஆண்டுகள் போதவில்லை; பா.ஜ.க-வுக்கு மீண்டும் வாய்ப்பளியுங்கள்’- இல.கணேசன் வேண்டுகோள் #

# இலையில கொஞ்சமாவது மிச்சம் வைங்க சாரே?!

-லாக் ஆஃப்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share