ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு!

Published On:

| By Balaji

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வரி விதிப்புகளிலிருந்து இந்தியா உள்பட எட்டு நாடுகளுக்கு அமெரிக்கா விலக்களித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை 30 விழுக்காடு வரை குறைத்துள்ள இந்தியா, ஈரான் மீதான அமெரிக்காவின் வரி விதிப்புகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று நம்பிக்கையில் இருந்தது. நவம்பர் 5ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ள அமெரிக்காவின் வரி விதிப்புகளால் அனைத்து நாடுகளையும் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாகக் குறைக்கும்படி அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. நவம்பர் 5ஆம் தேதி 12.01 மணி முதல் ஈரான் மீதான வரி விதிப்புகள் முழுமையாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசின் பேச்சாளர் ஒருவரும் உறுதிசெய்துள்ளார். இந்த வரி விதிப்புகளின் கீழ் ஈரானின் முக்கியத் துறைகளான ஆற்றல் வளம், கப்பல் போக்குவரத்து, கப்பல் கட்டுமானம் போன்ற துறைகள் குறிவைக்கப்பட்டுள்ளன.

காப்பீடு, ஈரானின் மத்திய வங்கியின் பரிவர்த்தனைகள், ஈரானிய நிதி நிறுவனங்களும் இதில் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரான் மீதான வரி விதிப்புகளிலிருந்து இந்தியா, ஜப்பான், தென்கொரியா, சீனா உள்பட எட்டு நாடுகளுக்கு அமெரிக்கா விலக்களித்துள்ளதாக அமெரிக்க அரசின் உயரதிகாரி ஒருவர் *ப்ளூம்பெர்க்* ஊடகத்திடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். இதற்காக அந்நாடுகள் ஈரானிடமிருந்து தொடர்ந்து இறக்குமதியைக் குறைத்துக்கொண்டே இருக்க வேண்டுமென்பது அமெரிக்காவின் நிபந்தனை. விலக்களிக்கப்பட்ட மற்ற நான்கு நாடுகளின் பெயர்கள் இன்னும் வெளியாகவில்லை.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share