}ஈரானிய இயக்குநரை ஈர்த்த போதைப்பொருள் அரசியல்!

இந்திய ரசனையைப் பேசும் ஈரானிய இயக்குனர் மஜீத் மஜீதியின் முதல் இந்தியத் திரைப்படம் பியாண்டு த க்ளவுட்ஸ்-இன் டிரெய்லர் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

ஈரானிய திரையுலகில் மிகவும் உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் பலவற்றை இயக்கி மக்கள் மனதில் தனக்கென ஓர் இடம்பிடித்தவர் மஜித் மஜீதி. 2004ஆம் ஆண்டு வரை சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இயக்குனர் மஜீதி ஆவார். சில்ட்ரன்ஸ் ஆப் த ஹெவன், கலர் ஆப் த பேரடைஸ் போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்களை இயக்கிய அவர் தற்போது இந்திய ரசனையைப் பேசும் வகையில் பியாண்டு த கிளவுட்ஸ் எனும் திரைபடத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குனர் மஜித் மஜீதி, நடிகர் இஷான் கட்டர், கேரளாவைச் சேர்ந்த நடிகை மாளவிகா மோகனன். கெளதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ .ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளரான சுஜாய் குட்டி பேசும்போது **இத்திரைப்படம் மொழி, கலாச்சாரம் போன்ற வேலிகளைத் தாண்டி சக மனிதர்களை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதை மஜீதியின் பார்வையில் மிக அற்புதமாக பதிவிட்டிருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.

ட்ரெய்லரில் 22 வயதான அமீர் பெரிய கனவுகளுடன் திரிந்து, தவறான வழியில் சென்றுகொண்டிருப்பதை அறிந்த அவனது சகோதரி தாரா, தனது சகோதரனைக் காப்பாற்ற முற்படும்பொது போலீஸால் கைதுசெய்யப்படுவதாக ட்ரெய்லரில் காட்டி எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார்கள். வட இந்திய மாநிலங்களில் போதைப் பொருட்களை வாங்கவும், விற்கவும் முற்படும் இளைஞர்களின் வாழ்க்கையும், இந்தத் தொழிலால் அவர்களை சார்ந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் இப்படம் பேசுவதாக ட்ரெய்லரிலிருந்து உணரமுடிகிறது. ஏற்கனவே, அபிஷேக் சௌபி இயக்கிய உட்தா பஞ்சாப் திரைப்படத்திலும் இதே அரசியல் பேசப்பட்டு, பல மாநிலங்களின் எதிர்ப்பைப்பெற்றது. மஜித் மஜிதியின் படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

[Beyond the clouds ட்ரெய்லர்](https://youtu.be/J-IzGBU344M)

�,”

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts