நம்மளும் மூணு வருசமா இங்க வந்து கருத்து சொல்லிகிட்டு இருக்கோம், சொந்தக்காரப் பயக கூட என்ன ஏதுன்னு கேட்க மாட்டிக்காங்க. அங்க ஒருத்தர் வேர்ல்டு கப் பத்தி ஜோசியம் சொன்னாரு ஓவர் நைட்டுல பேமஸ் ஆகிட்டாரு. அதுவும் நியூசிலாந்து கப் வாங்கும்னு தப்பா தான் அதையும் சொன்னாரு. இப்ப பார்த்தா இன்பநிதி எப்ப முதல்வர் ஆவாருன்னு கணிக்கிறதுக்காக ஸ்டாலின் வீட்டுக்கே போயிட்டாராம். யார் கண்டா ஆட்சி மாறுனா மினிஸ்டர் ஆனாலும் ஆகிடுவாரு.. நமக்கு எதுக்கு இந்த வம்பு..
ஹெல்மட் போட்டா உயிருக்கு ஆபத்துன்னு மதுரையில போலீஸ்காரங்களே விளம்பரம் பண்றாங்களாம். நான் போய் கருத்து சொல்லிட்டு வாரேன். நீங்க அப்டேட்டை பாருங்க..
**கோழியின் கிறுக்கல்!!**
குழந்தையை திருப்திப்படுத்த சங்கர் போல கதை சொல்வதை விட, இராம நாராயணன் போல் கதை சொல்லக் கற்றுக் கொள்வதே மிக்க நலம்!!!
**சக்திமான்**
`அவர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை!’ – நடிகர் சூர்யாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அன்புமணி
மஹாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டிங்களா…?
**mohanram.ko**
ஓட்டலில் மனைவி கூட டிபன் ஆர்டர்..
பொங்கல்..
வீட்ல பொங்கலே சாப்பிட மாட்டீங்க?
சரி இட்லி…
வீட்ல இட்லி தானே சாப்பிடுறீங்க, வேற ஏதாவது சொல்லுங்க…
பூரி?..
ஒரே எண்ணெயா இருக்கும்
ரோஸ்ட்
ஒரு கிண்ண மாவை வச்சே ஊத்திடுவாங்க. வயிறே நிறையாதுங்க..
இதுக்கு பட்டினியாவே இருந்துக்கலாம்
**மிடுக்கன்**
சுறுசுறுப்பு என்பது அதிகாலையில் முழிப்பது அல்ல…. அதிகாலையில் படுக்கையை விட்டு எழுவதே ஆகும் ..
**mohanram.ko**
தரமான சாலை வேண்டும் என்றால் சுங்கக் கட்டணத்தை செலுத்தி தான் ஆக வேண்டும்: நிதின் கட்கரி
அந்த சாலை வரி எதுக்குன்னே சொல்ல மாட்றாங்களே..
**கிப்சன்**
பாமகவால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவே மாற்றம் அடைந்துள்ளது!” – அன்புமணி
இந்தியா மட்டும் இல்லீங்க அமெரிக்கா ரஷ்யா ஜப்பான் இன்னும் பல
**கோழியின் கிறுக்கல்!!**
திருமணத்திற்கு பிறகு குடும்பம் நடத்த காதலை விட, காலில் விழுவதே அதிகம் உதவுகிறது!!
**ச ப் பா ணி**
ஏகலைவனிடம் டச் போன் இருந்திருந்தால், கட்டை விரலை கொடுக்க சம்மதித்திருக்க மாட்டார்.!
**எனக்கொரு டவுட்டு **
கோவில் அருகில் வீடு வைத்திருப்பவர்களுக்கு ஆடி மாசத்தில் அலாரம் ஒரு தேவையில்லாத ஆணி..!
**ரஹீம் கஸ்ஸாலி**
சிக்கன், முட்டையை சைவமாக அறிவிக்க வேண்டும் – சிவசேனா எம்.பி சஞ்சய் ரவுத் கோரிக்கை #
அப்படியே மாட்டுக்கறியையும் அறிவிச்சுட்டா பஞ்சாயத்து முடிஞ்சிடும்.
**ராஜேஷ்**
புதிய கல்விக் கொள்கையை விமர்சிக்க நடிகர்களுக்கு அருகதை இல்லை-தனியரசு
அடடே தனியரசா.. சாராயத்தை டோர் டெலிவரி செய்யனும்னு சொன்ன தங்கமான மனுசனாச்சேயா
**அன்புடன் கதிர்**
பொண்ணு பார்க்கும் போது லாஸ்லியா மாதிரி இருக்காங்க #
நம்ம வீட்டுக்கு வந்ததும் வனிதாவா மாறிடுறாங்க மனைவிகள் !!
**செந்திலின்_கிறுக்கல்கள் **
தபால்துறை தேர்வு ரத்து உங்கள் வெற்றி அல்ல,எங்கள்வெற்றி – தமிழிசை# அப்படியே நேற்று மழை பெய்ததையும் உங்கள் வெற்றியில் சேர்த்துக்கோங்க
**எனக்கொரு டவுட்டு **
மீட்டிங்கின் போது பேசாதவர்கள் எல்லாம் மீட்டிங் முடிந்தவுடன் கூடி ஒரு மீட்டிங் போடுவது டிசைன்..!
**நடை பாதை**
தாஜ்மஹாலுக்கே அழைத்து சென்றாலும் குழந்தைகளின் பார்வைக்கு அதிசயம்.
பலூன் கடையும்,
பொம்மை கடையும், தான்…!!!
**செந்திலின்_கிறுக்கல்கள் **
தமிழ்நாட்டை சேர்ந்த ஜோசியருக்கு இலவச விளம்பரம் கொடுத்ததை தவிர உலகக் கோப்பையால் தமிழருக்கு ஒரு பிரோஜனமும் இல்லை!
**கோழியின் கிறுக்கல்!!**
எத்தனை விளையாட்டு பொருள் வாங்கி கொடுத்தாலும் அதை வைத்து விளையாடாத குழந்தைகள், இந்த கொசு பேட்டை மட்டும் எளிதாக விளையாட்டு பொருளாக்கி உடைத்து விடுகிறார்கள்!!
**செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்..**
கடவுள் தூணிலும் இருப்பார்,துரும்பிலும் இருப்பார். நிச்சயம் VVIP வரிசை உள்ள கோவில்களில் மட்டும் இருக்க வாய்ப்பில்லை!
**பர்வீன் யூனுஸ்**
சூர்யா பேசினது ரொம்ப சரி – சீமான் # ஆமா.. ‘கதை’ விடாம பேசியிருக்காரு..!
**மெத்த வீட்டான்**
வீழ்வது எதுவாக இருப்பினும்
சேஃப்டியாக இருப்பது மொபைலாக இருக்கட்டும் !
**S.K.Soundhararajan**
நமது கட்சி 31 ஆண்டு சாதனையை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்.-ராமதாஸ்.#
எத்தனை முறை திமுக-அதிமுகவுடன் கூட்டணி வைத்தை தானே.!
**கலைவாணி**
உலக நாடுகளின் மத்தியில் பாரதத்தை தலைநிமிர செய்த உன்னதமான தலைவன் மோடி – பாண்டே
குடும்ப செலவு அதிகமாய்ட்டே போகுது ஆத்தா எனக்கு வேற வழி தெரில….
**ஜோக்கர்…**
விவரிக்க முடியாத வித்தைகளில் இதுவும் ஒன்று
முடிவெட்டியவுடன் சலூன்கடை கண்ணாடியில் அழகாய் தெரிவதும்,
குளித்து முடித்து வீட்டுக்கண்ணாடியில் அசிங்கமாய் தெரிவதும்..!!!
-லாக் ஆஃப்
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
�,”