�
கடந்த மார்ச் இறுதியில் இருந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மக்களுக்கு யோகா கற்றுக்கொடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள், மக்களவைத் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக இந்தியா வந்திருக்கிறார். பொள்ளாச்சியில் வாக்கு செலுத்திய பின்னர், தேர்தலில் வாக்களிக்கவேண்டிய அவசியம் குறித்து ஜகி வாசுதேவ் பேசினார்.
அப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது ஏற்படும் அவநம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது. “டெக்னாலஜியைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் நமக்கு இல்லவே இல்லை. மனிதன் வளரும்போது அவன் பயன்படுத்தும் அனைத்தும் அவனுடன் வளரும். எப்போதும் டெக்னாலஜியுடன் வாழும் மக்கள், ஏன் எலக்ட்ரானிக் வாக்குப் பதிவைப் பற்றிக் கவலைப்படவேண்டும்” என்று கேள்வியெழுப்பினார். சாதி, மதம் சார்ந்த தேர்தல் அணுகுமுறை குறித்து பேசிய ஜகி வாசுதேவ், “இளைஞர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவு நல்லதாகவும், தேவையானதாகவும் இருக்கும்” என்று கூறினார்.
ஜகி வாசுதேவின் முழு பேட்டி:
�,”