}இளைஞரை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த பரிவாரம்!

public

மாட்டுக்கறி விவகாரத்தில் எழுந்த நெருப்பு இன்னும் அடங்கவில்லை. பாஜக மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும், அதையொட்டு கலாச்சார அடிப்படைவாத இந்துத்துவ அமைப்புகள் எழுச்சி பெற்றதும் மாட்டுக்கறிக்கு எதிரான பிரச்சாரம் இந்தியா முழுக்க முன்னிறுத்தப்பட்டது. தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் மட்டுக்கறியை பல்வேறு சமூகங்களும் உண்டு வரும் நிலையில் வட இந்தியாவைப் பொருத்தவரை இது ஒடுக்கப்பட்ட தலித் மக்களையும், சிறுபான்மை முஸ்லீம்களையும் முன்வைத்தே இந்த பிரச்சனை கட்டி எழுப்பப்படுகிறது. இம்முறை ராஜஸ்தானில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

ராஜஸ்தான் மாநிலம் பிராதாப்கர்க் மாவட்டத்தில் செவ்வாய்கிழமை அன்று ராஜஸ்தானில் இருந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிராவுக்கு 96 காளைகள் இரண்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.

அந்த பகுதியைச் சேர்ந்த 150 பேர் சேர்ந்து வண்டியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த காளைகள் முறைகேடான வழியில் ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீரிலிருந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ‘மாட்டிறைச்சி கூடங்களுக்குக் கொண்டு செல்வதாகக் கூறி போலீசை வைத்து மறித்திருக்கின்றனர்.

அதில் ஒரு வண்டியை பரிவார அமைப்புகளில் ஒன்றான ‘பஜ்ரங் தளம்’ மற்றும் பசுபாதுகாப்பு அமைப்பான ‘கவ் ரக்‌ஷ சமிதி’ அமைப்பினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் லாரியில் இருந்த மூன்று பேரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மிகமோசமான தாக்குதல் நடத்திய அந்த கும்பல், லாரியில் இருந்த நபர் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அந்த பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் கலு ராம் ராவத், வண்டியில் இருந்த மூன்று பேரில் இருவரை கும்பலிடம் இருந்து மீட்டுவிட்டோம். இன்னொரு நபர் தப்பிச் சென்றுவிட்டார். இரண்டு வண்டிகளிலும் இருந்த 7 பேரை கைதுசெய்துள்ளோம்.” என்றார். இளைஞரை நிர்வாணமாக்கித் தாக்கும் புகைப்படம் ஒன்றில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் கும்பலோடு நிற்பது தெரிய வந்துள்ளது. இதனால், காவல்துறையே தாக்குதல் நடத்திய கும்பலிடம் வாகனங்களில் இருந்தவர்களை ஒப்படைத்ததா? அல்லது காவல்துறை வேடத்தில் இருந்தவர்கள் பிடித்து சித்ரவதை செய்த பின்னர் உண்மையான காவல்துறை வந்ததா? போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதைப் பற்றி கேட்டதற்கு ராவத், “தாக்குதல் நடத்திய கும்பலிடம் இருந்து அந்த இளைஞரை மீட்பதற்குத்தான் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்தனர். தாக்குதல் நடத்திய கும்பலின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது”என்றார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *