இலங்கை அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அந்நாட்டிலுள்ள ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மக்கள் விடுதலை முன்னணி என்ற பொருள் படக் கூடிய ஜனதா விமுக்தி பெரமுனா என்று அழைக்கப்படுகிறது. இக்கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்கே நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“ஏப்ரல் 21 கொழும்புத் தாக்குதலுக்குப் பிறகு ரணில் விக்கிமசிங்கே அரசின் மீது நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. எனவே சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வழங்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இலங்கையின் பாதுகாப்பின் மீது அக்கறை காட்டவில்லை என்று தொடர் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் வர இருக்கும் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக கோத்தபய ராஜபக்ஷே நேற்று அறிவித்தார்.
கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பிரதமர் ரணிலை பதவியில் இருந்து நீக்கி இலங்கையில் அரசியல் குழப்பத்தைத் தொடங்கி வைத்தார் சிறிசேனா. பெரும் பரபரப்புக்குப் பின் பலமுறை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் பிரதமர் ஆனார் ரணில். இம்முறை ஜேவிபி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.�,”