இலங்கை சிறையில் 4 தமிழக மீனவர்கள் – பிரதமருக்கு ஜெ.கடிதம்!

Published On:

| By Balaji

இரு தினங்களுக்கு முன்பு கட்சத் தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செயதனர்.இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், “மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.பாக் ஜலசந்தியில் நமது பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.பறிமுதல் செய்த மீனவர்களின் படகுகளை விடுவிப்பதிலும் தாமதம் செய்து வருகிறது இலங்கை அரசு.இது மனிதாபிமானமற்ற செயல்.இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.எனவே கைது செய்யப்பட்ட 4 ராமேஸ்வரம் மீனவர்களையும்,இலங்கை வசமுள்ள 84 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment