இலங்கை நாடாளுமன்றம் வரும் 5 ஆம் தேதி கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்…. இந்தியா கொழும்பில் தனது அரசியல் நடவடிக்கைகளை நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர்களான லலித் மன்சிங் மற்றும் பேராசிரியர் சுக் டியோ முனி ஆகியோர் கொழும்பில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர். இது அதிகாரபூர்மாக நடந்த சந்திப்பு இல்லை என்றாலும் கூட, சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த சந்திப்பு பற்றி கொழும்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய சம்பந்தன், பேச வேண்டிய விடயங்களை எல்லாம் பேசினேன். இலங்கையில் என்ன நடந்தாலும் அது நாட்டின் அரசமைப்புக்கு இணங்க – நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலத்துடன் நடைபெற வேண்டும் என்று என்னைச் சந்தித்த இந்தியப் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தேன். இந்தியா எமது அயல் நாடு. எனவே, இலங்கை விடயத்தில் இந்தியா நடுநிலையுடன் நிதானமாகச் செயற்பட வேண்டும் என அவர்களிடம் கூறினேன்” – என்று பதிலளித்தார்.
ஏற்கனவே சம்பந்தன் ராஜபக்ஷேவை சந்தித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.�,”