தென்னாப்ரிக்கா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 392 ரன்கள் சேர்த்தது. பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 110 ரன்னில் ஆட்டமிழந்தது.
இதனால் 282 ரன்கள் தென்னாப்ரிக்கா முன்னிலை பெற்றது. இலங்கைக்கு ஃபாலோ-ஆன் கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 507 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
507 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்திருந்தது. ரபாடாவின் அபாரமான பந்து வீச்சினால், இலங்கை அணி 224 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி 282 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 எனக் கைப்பற்றிவிட்டது. ரபாடா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.�,