இறந்து ஏழு ஆண்டுகளுக்குப்பின் வீடு திரும்பிய ராணுவ அதிகாரி!

public

இதுபோன்ற சம்பவத்தை இந்திய சினிமாக்களில் மட்டுமே நாம் அதிகம் பார்த்திருப்போம். ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில், தன் சுயநினைவை இழந்த ஒரு ராணுவ அதிகாரி பின்னர் இறந்துவிட்டதாக ராணுவம் அறிவித்துவிட்டது.

ஆனால், அந்த அதிகாரி இறக்கவில்லை. ஹரித்துவாரில் சுற்றித் திரிந்திருக்கிறார். விபத்தில் நினைவை இழந்தவருக்கு மீண்டும் நடந்த விபத்தால் நினைவு திரும்ப, தன் குடும்பத்தினருடன் இணைந்திருக்கிறார். அந்த அதிகாரியின் பெயர் தரம்வீர் சிங்.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கைலாஷ் யாதவ், தன் வீட்டில் இரவுநேரம் உள்ளே நுழைந்த மர்ம நபரை சமாளிக்கத் தயாரானபோது அவருக்குப் பெரும் அதிர்ச்சி. அந்த மர்ம நபர் வேறு யாரும் இல்லை; ஏழு வருடங்களுக்குமுன்பு ராணுவத்தினரால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட அவரது மகன் தரம்வீர் சிங். தந்தை-மகனின் இந்த கண் கலங்கவைக்கும் சந்திப்புக்குப்பிறகு, தரம்வீர் சிங் தன் மனைவியையும், 2 பெண் குழந்தைகளையும் தன் சகோதரனையும் காண அல்வாருக்குப் புறப்பட்டார்.

39 வயது மதிக்கத்தக்க சிங், சட்டீஸ்கர் மாநிலம் டேராடூன் ராணுவ மையத்தில் பணி செய்து வந்தார். அங்கு நடந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கியவருக்கு நினைவு பறிபோனது. நினைவுதப்பியவர் காணாமல்போனாலோ, ராணுவத்தில் பணிசெய்த ஒருவர் காணாமல் போய் மூன்று ஆண்டுகள்வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ, அவர் மீண்டும் ராணுவத்தில் வந்து இணையவில்லை என்றாலோ அவரை, இறந்துபோனவராக அறிவிப்பது ராணுவ மரபு. தரம்வீர் சிங்கின் சகோதரர் ராம் நிவாஸ், டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “என் சகோதரர் ராணுவ வண்டியை டேராடூனில் இருக்கும் சக்ரடா ரோட்டில் ஓட்டிச் செல்லும்போது விபத்து நடந்தது. அந்த விபத்தில் என் அண்ணனுடன் இன்னும் இரு அதிகாரிகள் காயமடைந்தனர். ஆனால், அவர்கள் மீண்டுவந்து ராணுவத்தை தொடர்புகொண்டு தகவலைச் சொன்னதோடு என் சகோதரர் காணாமல்போனதாகவும் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

மூன்று ஆண்டுகளாக அவரைப்பற்றிய தகவல் எதுவும் இல்லாதநிலையில், ராணுவம் அவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கி அவரது குடும்பத்துக்கு ஓய்வூதியமும் வழங்கி வந்தது. சிங்கின் குடும்பத்தினருக்கு அவர் எப்படியும் ஒரு நாள் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. அவருக்காக நோன்பிருந்து காத்திருந்த அவர் மனைவி, தன் கணவன் எப்படியும் தன்னைச் சந்திக்கவருவார் என, தன் உள்ளுணர்வு கூறியதாக நெஞ்சம் நெகிழ்ந்தார். சிங், தன் குடும்பத்தாரிடம் தனக்கு 2009இல் நடந்த விபத்துக்குப்பிறகு எதுவும் நினைவில் இல்லை எனக் கூறினார். அவரைச் சோதித்த டாக்டர் ராம் நிவாஸ் கூறியது:

“அவர் நினைவில் இருப்பதெல்லாம், நினைவு மீண்டும் திரும்பக் காரணமான இரண்டாவது நடந்த இருசக்கர வாகன விபத்துக்கு முந்தைய வாரம் அவர், ஹரித்துவார் நகர வீதிகளில் பிச்சை எடுத்துத் திரிந்திருக்கிறார். அவரை இடித்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துவரும்போது அவருக்கு நினைவு திரும்பியது என்றார்”

தன் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தது தொடர்பாக என்ன சொல்கிறார் சிங். “நான் உயிரோடு இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் என்மீது மோதினார். ஆனால், அவர் மனிதர்கள்மீது பரஸ்பரமான அன்பு உள்ளவர். அதனால் நான் காயமடைந்ததும் என்னை தன் மோட்டார் சைக்கிளிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், மருத்துவமனைக்குச் சென்று சேர்வதற்குமுன்னால் செல்லும்வழியிலேயே எனக்கு நினைவு திரும்பிவிட்டது. நான் இப்போது என் குடும்பத்துடன் இருக்கிறேன். அந்த நபர் எனக்கு ரூ.500 பணம் கொடுத்தார். அதைக் கொண்டுதான் நான் ஊருக்கு வந்துசேர்ந்தேன். வந்தபின்னர் என் பெண் குழந்தைகளை அடையாளம் காணச் சிரமப்பட்டேன்” என்ற தரம் வீர் சிங்கை, மேல்சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் அழைத்துச்செல்ல இருக்கின்றனர் உறவினர்கள்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0