இரவில் டிக்கெட் பரிசோதனை கிடையாது: ரயில்வே வாரியம்!

public

ரயில் பயணத்தின்போது,முன்பதிவு செய்த பெட்டிகளில் இருக்கும் பயணிகளிடம் எந்தவித காரணமுமின்றி டிக்கெட் பரிசோதனை செய்யக் கூடாது என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை என்ற பெயரில் பரிசோதகர்கள் இரவு வேளையில் பெண்களிடம் டிக்கெட் கேட்டு தொந்தரவு கொடுப்பதாக ரயில்வே துறைக்கு புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து,இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் , முன்பதிவு செய்த பெட்டிகளில் உள்ள பயணிகளிடம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே டிக்கெட் பரிசோதனை செய்ய வேண்டும். பத்து மணிக்கு பிறகு பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை என்று தொந்தரவு செய்யக்கூடாது.

ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பரிசோதனையை முடித்திருக்க வேண்டும். மேலும்,ஏற்கனவே பரிசோதிக்கப்பட்ட பயணிகளிடம் உரிய காரணமில்லாமல்,தொந்தரவு செய்யக்கூடாது. ஆனால், 10 மணிக்கு மேல் புறப்படும் ரயில்கள், போலீஸார் புகார் அளிக்கும் பயணிகள் மற்றும் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட வேண்டியவர்களிடம் மட்டுமே இரவில் சோதனை நடத்தலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிக்கெட் பரிசோதகர்கள் கூறுகையில், இந்த உத்தரவு, தெற்கு ரயில்வே நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. முன்பு,ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு டிக்கெட் பரிசோதகர் இருப்பார். ஆனால்,தற்போது, மூன்று அல்லது நான்கு பெட்டிகளுக்கு ஒரு டிக்கெட் பரிசோதகர்தான் பொறுப்பேற்கிறார். கூடுதல் டிக்கெட் பரிசோதகர்கள் பணியமார்த்தப்படாத வரை, இந்த உத்தரவு நடைமுறையில் சாத்தியமில்லை எனக்கூறினர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0