^இரண்டாம் வகுப்பு சிறுவனின் நேர்மை!

Published On:

| By Balaji

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஈரோடு அருகே கனிராவுத்தர் குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பாட்ஷா – அஃப்ரோஸ் பேகம். இவர்களின் மகன் முஹம்மது யாசின், சேமூர் அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

முகமது யாசின் நேற்று(ஜூலை 11) பள்ளிக்கு சென்றபோது சாலையின் ஓரத்தில் பணம் கிடந்ததை பார்த்துள்ளார். அந்த பணத்தை எடுத்த சிறுவன், பணத்தை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, ஆசிரியர் சிறுவனை அழைத்து கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று பணத்தை ஒப்படைத்துள்ளார்.

போலீசார் சிறுவனுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். பணத்தை தொலைத்தவர்கள், தகுந்த ஆதாரங்களை கூறி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பணத்தை ஒப்படைத்த சிறுவனுக்கு பள்ளியிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, சிறுவயதிலேயே நல்ல குணநலங்களுடன் வளரும் குழந்தைகள் இருக்கின்றனர் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share