இந்த சோஷியல் மீடியாவுல தெரிஞ்சு பண்றாங்களா இல்ல, தெரியாம பண்றாங்களான்னு தெரிஞ்சிக்க முடியாமலேயே சிலபேரு சில விஷயங்கள் பண்ணுவாங்க, அந்தமாதிரி மேட்டர்தான் இது. டீமானிடிஸேஷன் பண்ணி புதுசா ரெண்டாயிரம் ரூபா விட்டப்போ, “ இந்த நோட்டுல சிப் இருக்கு, கருப்புப் பணத்தையெல்லாம் இதுவழியா மீட்டுடலாம், ஆக்சுவலா இது பிரதமரோட ராஜ தந்திரம்”னு சொல்லிட்டு இருந்தாங்க. அந்த ராஜ தந்திரம் கடைசியில என்ன ஆச்சுங்கிறது உங்களுக்கே தெரியும்.
அடுத்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிச்சு இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரத்துல பின் தங்குனுச்சு இந்தியா. ஆனா “அமெரிக்காவுல இருக்குற இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சிதான் இது”ன்னு இதுக்கும் சிலர் சப்பைக் கட்டு கட்டுனாங்க. இதைக்கேட்டு பிரதமருக்கே கூட புல்லரிச்சாலும் புல்லரிச்சிருக்கும்னா பாத்துக்கோங்க.
அந்த வரிசையில இப்போ புதுசா நாலு நாளுக்கு முன்னாடி இன்னொரு சம்பவமும் நடந்துச்சு. அதாவது கேரள வெள்ள நிவாணமாக ரூ.700 கோடியைத் தர்றதாக அறிவிச்சிருந்துச்சு ஐக்கிய அரபு அமீரகம். உடனே சில பேரு வந்து “பாத்தீங்களா பிரதமரோட ராஜதந்திரத்தை? பெட்ரோல், டீசல் விலைலாம் கூடுனப்போ எப்புடித் திட்டுனீங்க. இப்போ அந்த நாடுகள்கிட்டயிருந்தே நிவாரணம் வழியாக 700 கோடி ரூபாயை எப்புடி வாங்குனாங்க பாத்தீங்களா”ன்னு கேட்டாங்க. சொல்லி வாயை மூடல அதுக்குள்ள அந்த நிவாரணத் தொகையையே வாங்கப் போறது இல்லைன்னு இப்போ அறிவிச்சிருக்காங்க மத்திய அரசு. பிரதமரோட ராஜதந்திரம்னு சொல்லி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி முட்டுக் கொடுத்தவங்களாம் இப்ப எதுல போயி முட்டிக்கப் போறாங்கனுதான் தெரியலை.
**@amuduarattai**
வீட்டு வேலைகளை,அம்மா செய்த போது அது ஒரு வேலையென உணரவே இல்லை.மனைவி செய்த போது கடமை தானே எனத் தோன்றியது.மகள் செய்த போது மனம் வலித்தது.
**@HAJAMYDEENNKS**
உலக வங்கியில் கடன் வாங்கும்போது எல்லாம் இந்தியாவின் மானம் விமானம் ஏறாது போல !
**@_safnahusain**
தொல்லை செய்யாமல்
என்றும் தொடர்பில்
இருங்கள்..
யாரும் உங்களை தொலைக்க முயற்சிக்க மாட்டார்கள்..
**@Arjundreams43**
கோபப்படும்போது மட்டும்
“என்னால இவ்ளோதான் முடியும்”
என்று கஞ்சத்தனம் காட்டுவதில்லை யாரும்!
**@divakarantmr**
பசித்து புசி
தேடி அடை
வீழ்ந்து எழு
போராடி வெல்
மகிழ்வித்து மகிழ்
பொறுத்து சினம்கொள்
செய்வதை சொல்
உதவி வாழ்
அநீதி எதிர்
அன்பை தொழு.!
**@mohanramko**
‘Field அவுட்’ ஆகாமல் கடைசி வரை நிற்பது, விவசாயி மட்டுமே
**@mujib989898**
நம்மை நமக்கே புரிந்தால் போதும்
அடுத்தவருக்கு நம்மை பற்றி பின்னாளில் புரிய வைத்து விடலாம்…
**@Kozhiyaar**
ஜப்பானிடம் ஒரு லட்சம் கோடி கடன் வாங்கி புல்லட் ரயில் திட்டம் அமைப்பது நாட்டுக்கு பெருமை!!
ஆனால், வெள்ளத்திற்காக இரக்கத்துடன் கொடுக்கப்படும் பணத்தை பெற்றுக் கொள்வது நாட்டிற்கு அவமானம்!?
**@imparattai**
பந்தியில் இருப்பவர்களுக்கு ஒவ்வொன்றையும் கேட்டுகொடு.
பசியோடு இருப்பவர்களுக்கு எதையும் கேட்காமல் கொடு.!
**@saravananucfc**
அதிகமாக சப்ப கட்டு கட்டியவர் எலும்பு முறிவு வைத்தியராக தான் இருப்பார்.
**@Selvatwitz**
நடத்தையை கண்டு அவர்களின் நாவை எடை போட முடியாது ஒருபோதும்
**@abuthahir707**
படிச்ச படிப்புக்கு இல்லாத வேலை ஒரு மாதம் படிக்கும் கோர்ஸ்க்கு இருக்கிறது என்பது தான் மிகப்பெரிய வலி
**@SaranyaaaRaj**
ரசிக்கும் பொறுமை இருக்கும் வரை மௌனம் பேரழகு….!!
**@amuduarattai**
வாட்ஸப் செய்தியைக் கூட நம்புகிறார்கள். ஆனால், சீமான் சொன்னால் தான், சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள்.
**@chithradevi_91**
வங்கிகளில் அவசரத்துக்கு பேனா கடன் கேட்டால் மூடியை கழற்றிட்டு தருவதெல்லாம் அநியாயத்துக்கு அவமானம்ங்க
**@SaranyaTwtzz**
மொபைல் எண்ணையும்,
நெட்வொர்கோடு
சேமித்து வைக்கும் அளவிற்கு
மக்களை உருவாக்கிய பெருமை ஜியோவையே சாரும்..
– லாக் ஆஃப்!�,”