இன வேற்றுமைக்கு எதிராக பெர்லினில் மாபெரும் பேரணி!

Published On:

| By Balaji

wஇனவாதம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றுக்கு எதிராக ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நேற்று முன்தினம் மாபெரும் பேரணி நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியின் செம்னிட்ஸ் நகரில், ஜெர்மன் நபர் ஒருவர் அகதிகளால் குத்தப்பட்டார் என்று கூறி வலதுசாரி அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆறு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், அகதிகளுக்கு ஆதரவாகவும் இனவாதம் மற்றும் வேறுபாடு ஆகியவற்றுக்கு எதிராகவும் நேற்று முன்தினம் (அக்டோபர் 13) ஜெர்மனியின் பெர்லின் நகரில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் 2,42,000 பேர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினாலும், ஆயிரக்கணக்கில் மட்டுமே மக்கள் கலந்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அகதிகள் ஆதரவு குழுக்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆதரவு குழுக்கள், இஸ்லாமிய அமைப்புகள் ஆகியவை இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெக்கோ மாஸும் பேரணியை ஆதரித்திருந்தார்.

நாசிசம், இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. மத்திய தரைக்கடல் வழியாக ஜெர்மனிக்கு வரும் அகதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகளும் பேரணியில் இடம்பெற்றிருந்தன.

40,000 பேர் வரை கூடுவார்கள் என்று மட்டுமே எதிர்பார்த்த நிலையில், இந்தப் பேரணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாக இண்டிவைசபிள் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரேசா ஹார்ட்மென் கூறியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel