கலை என்பதையும் கடந்து சினிமா கோடிகளை குவிக்கும் வணிகமாகிவிட்டது. ஆனால் எளிய மனிதர்களின் கதைகளை சரியான அரசியல் பார்வையோடு குறைந்த பட்ஜெட்டிலேயே எடுக்க முடியும் என்பதை ஈரானிய இயக்குநர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர், அவர்களில் முக்கியமானவர் ஜாபர் பனாஹி. இவர் இயக்கியது மொத்தம் 8 படங்களே. அதிலும் பெரும்பாலான படங்கள் ‘சட்டவிரோதமாக எடுக்கப்பட்டவை’ என்ற பெயரில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டவை. உள்நாட்டில் சட்டவிரோதம் என்று ஒதுக்கப்பட்ட இவரது படங்கள் அனைத்துமே உலகத்திரைப்பட விழாக்களில் ஆகச் சிறந்தவை என கொண்டாடப்பட்டவை. இவரது பின்வரும் வரிகள் இந்த யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன.
**“உலகத்தினர் கோடிக்கணக்கான பணத்தில் படங்களை எடுக்கும்போது, ஒரு சின்ன பெண் மீன் வாங்குவது பற்றி நாங்கள் படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.”**�,