[இன்று ஆன்லைனில் ‘பென்ஷன் அதாலத்’!

public

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மக்கள் சந்திக்கும் குறைகளைத் தீர்ப்பதற்காக இன்று (மார்ச் 21) மதியம் 2.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் இணைய வழி வெபினார் நிகழ்ச்சியை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடத்த உள்ளது.
இதுகுறித்து மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 (சென்னை வடக்கு மண்டலம்) சி.அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையைப் பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை pension.rochn1@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரி மூலம் அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் அனுப்பும்போது ‘பென்ஷன் அதாலத்’ என்று குறிப்பிட்டு, பெயர், வருங்கால வைப்பு நிதி கணக்கு எண், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
இன்று நடக்கும் இணையவழி குறைதீர்ப்பு முகாமில் அவர்களுடைய குறைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படும். இந்த இணைய வழி முகாமில் கலந்துகொள்வதற்கான லிங்க் ஓய்வூதியதாரர்களின் இணையதள முகவரிக்கு அல்லது தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *