[இன்னொரு செருப்பும் வரட்டும்: கமல்

Published On:

| By Balaji

மே 12ஆம் தேதியன்று அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக 76 காவல்நிலையங்களில் கமல் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது. முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கமல் மனுத் தாக்கல் செய்துள்ளார். பின்னர் திருப்பரங்குன்றத்திலும், அரவக்குறிச்சியிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல் மீது செருப்பு, முட்டை, கற்கள் போன்றவை வீசப்பட்டன. இந்நிலையில், தன் மீது செருப்பை வீசியவருக்குதான் அவமானம் என்று கமல் தெரிவித்துள்ளார்.

ஒத்த செருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “காந்தி ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவரை பார்க்க ஏராளமானோர் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். ஏனென்றால் காந்தி அப்போது ஒரு சூப்பர்ஸ்டார். அப்போது காந்தியின் கால்களிலிருந்து ஒரு செருப்பு தவறி கீழே விழுந்துவிட்டது. ரயில் வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. உடனே அடுத்த செருப்பையும் கழற்றி தூக்கியெறிந்துவிட்டாராம். என்ன இப்படி செய்துவிட்டீர்கள் என்று அருகே இருந்தவர்கள் கேட்டனர்.

அதற்கு காந்தியோ, ஒரு செருப்பு இருந்தால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை; இரண்டு செருப்புகள் இருந்தால் வேறு யாராவது பயன்படுத்திக் கொள்வார்கள் என்று சொன்னார். அவரின் ரசிகன் நான். என்மீது வீசப்பட்ட செருப்பில் ஒன்று வந்துசேர்ந்துவிட்டது. இன்னொன்றும் வரும். அதற்கான அருகதை எனக்குண்டு. இரண்டு செருப்புகளும் வரட்டும். ஒத்தை செருப்பை பற்றி அனைவரும் பயந்து பயந்து பேசினார்கள். இதில் ஒரு பயமுமில்லை. செருப்பை வீசியவருக்குதான் அவமானம். அதனால் நாம் பயப்படவேண்டியதில்லை. பெருமையாகவே சொல்லிக்கொள்ளலாம்” என்று கூறினார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மான்ஸ்டர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/14)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share