இன்டியன் பொலிடிக்கல் லீக் ஆரம்பிச்சுருச்சே: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

போன வருசம் இந்நேரம் காவேரிக்காக ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாதுன்னு பெரிய போராட்டமே நடந்துச்சு. இந்த வருசம் டிக்கெட் எடுக்குறதுக்கு பெரிய போராட்டமே நடக்குது. ரெண்டு நாளு லீவு போட்டு லைன்ல நின்னு டிக்கெட் வாங்கிட்டு வந்ததை டீக்கடையில் பெருமையா சொல்லிகிட்டு இருந்தாரு ஒருத்தர். உண்மையிலே பார்த்தா ஒரிஜினல் ஐபிஎல் போட்டி நடக்கப் போற இந்த எலெக்‌ஷன் தான். அதான் இன்டியன் பொலிடிக்கல் லீக். அங்க மாதிரியே இங்கேயும் ஏலம் எடுத்து ஆள் சேர்க்குறாங்க. அங்க மாதிரியே இங்கேயும் சூட்கேஸ் கொடுக்குறாங்க. இந்த ரெண்டு மாசமும் ரெண்டு ஐபிஎல்லையும் மாத்தி மாத்தி பார்த்தே பொழுது போய்டும். அப்டேட்டை பாருங்க.

**@Kozhiyaar**

நம்ம சுத்தி இருக்கிறவனெல்லாம் விக்ரமன் படத்துல வர மாதிரி நல்லவனா இருக்கணும் நினைச்சா, விஜயகாந்த் படம் மாதிரி வர்றதெல்லாம் வில்லனா இருக்கு!!

**@mangudiganesh**

பாலியல் குற்றவாளி பார் நாகராஜ் கலெக்டரை சந்தித்து சுலபமாக மனு கொடுக்குறான்!

இதுபோல் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலெக்டர் மனு வாங்கியிருந்தா. 13 உயிர் போயிருக்குமா..?

புகார் கொடுத்ததும் போலீஸ் நடவடிக்கை எடுத்து இருந்தா! கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த கொடுமை நடந்திருக்குமா?

**@amuduarattai**

ஈஸியான கணக்கை எடுத்துக்காட்டில் கொடுத்து விட்டு, கஷ்டமான கணக்கு மாணவர்களை செய்யச் சொல்வதை நிறுத்தாத வரை, கணக்கு பாடத்தை மாணவர்களுக்கு பிடிக்காது.

**@Thaadikkaran**

தனித்துப் போட்டியிடும் ஜெ.தீபாவின் அதிரடி முடிவால் கதிகலங்கும் அரசியல் கட்சிகள்# யப்பா டேய், இதை படிச்சா தீபாவே சிரிச்சிருக்குமே..!!

**@Anandh_Offl**

நாம புது துணிக்கடையில் எடுக்குற ஒவ்வொரு துணியின் விலையிலும் ஒரு செங்கல்லின் விலை மறைக்கப்படிருக்கும்

**@RahimGazzali**

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற அதிமுகவின் வேண்டுகோளை ஆதரிப்போம்!- அன்புமணி

குற்றவாளிக்கு ஏன் மணிமண்டபம் என்று கேட்டதிலும் மாற்றமுண்டா?

**@amuduarattai**

அடங்கிப் போவதை ஆண் குழந்தைகள், அப்பாகளிடமிருந்தும், அனுசரித்து போவதை பெண் குழந்தைகள், அம்மாக்களிடமிருந்தும் கற்றுக் கொள்கிறார்கள்.

**@shivaas_twitz**

நம் உடலின் வளையும் தன்மையை சோதிப்பவர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்..!

**@HAJAMYDEENNKS**

பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி கேட்டு கோவை கலெக்டரிடம் இரண்டு மாணவிகள் மனு கொடுத்திருக்கிறார்கள்

பாதுகாப்புடன் இருக்கும் அரசியல்வாதிகள் ,தொழிலதிபர்கள் எல்லாம் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும்போது பாதுகாப்புக்காக பெண்களுக்கும் துப்பாக்கி கொடுக்கலாம் !

**@TamilanRabeek**

பொது நலன் கருதி

நீங்கள் போண்டா, வடை போன்ற பலகாரங்கள் தின்று முடித்ததும் அந்த காகிதத்தை படிக்காமல் தூக்கி எறிய வேண்டாம்.

அது ரபேல் ஆவணமாககூட இருக்கலாம் முடிந்த அளவு அரசுக்கு உதவலாமே.

**@Thaadikkaran**

விடுப்பா விடுப்பா, சனிக்கிழமை வந்தா சந்தோசப்படுறதும், சனிப்பெயர்ச்சி வந்தா வருத்தப்படுறதும் சகஜம் தானே..!!

**@RahimGazzali**

‘கையில் கேமரா மொபைல் இல்லாத காலமே பாதுகாப்பான காலம்” என்று எதிர்காலத்தில் சொல்லுவாங்க பாருங்க.

**@Aruns212**

‘டிவி வால்யூமைக் குறை’ என்று கோபமாகச் சொன்னால் அது அப்பா; பொறுமையாகச் சொன்னால் அது நேரலையில் வரும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

**@BoopatyMurugesh**

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிட்டதற்கு 25 லட்சம் இழப்பீடு!

இது நம்ம வரிப்பணத்துல எடுத்து குடுப்பானுங்க.. எடப்பாடியும், அந்த எஸ்.பியும் ஆளுக்கு 12.5 லட்சம் போட்டு குடுக்கனும்ன்னு சொல்லனும்..

**@mohanramko**

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம்!

ஆட்டக்காரிக்கு 500 ரூவா?

**@amuduarattai**

நமக்கு தெரிந்தவர்கள் டாக்டராக இருந்தால், அவர்களை எங்கு பார்த்தாலும், மருத்துவ ஆலோசனை கேட்பதற்கென்றே, நம்மிடம் ஒரு நோய் இருக்கும்.

**@parveenyunus**

விடுமுறை எடுத்தாவது வாக்களியுங்கள்- மோடி #

அதுக்கு முதல்ல எங்களுக்கு வேலையை குடுங்க..!

**@shivaas_twitz**

தற்காலத்தில், நட்ட நடு காடு என்பது ‘நெட்’ இல்லாத இடத்தை குறிக்கும்..!

**@mufthimohamed1**

உலகின் பெரும் பொய்களில் ஒன்று ஃபோன சார்ஜ்ல போட்டுட்டு போயிருக்காங்க வந்ததும் ஃபோன் பண்ண சொல்றேன்

**@idumbaikarthi**

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற அதிமுகவின் வேண்டுகோளை ஆதரிப்போம் – அன்புமணி ராமதாஸ்

பசிதான் எத்தகைய கொடிய நோய்.?

-லாக் ஆஃப்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share