இனி நம்பர் பிளேட்டுடன்தான் கார்கள் விற்பனைக்கு வரும்!

public

வாகனங்கள் விரைவில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என்றும், இதற்கான செலவினம் வாகனத்தின் மொத்த விலையுடன் சேர்க்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கீகரிக்கப்பட்ட சில அமைப்புகளிடமிருந்து நான்கு சக்கர வாகனங்களின் உரிம எண்கள் அடங்கிய நம்பர் பிளேட்டுகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. நம்பர் பிளேட்டுகளில் இடம்பெற வேண்டிய எண்களை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் வழங்குகின்றன. இந்நிலையில் நம்பர் பிளேட் நடைமுறை தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இது தொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கார்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் விரைவில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும். நம்பர் பிளேட்டுகளின் விலை வாகனங்களின் விலையில் சேர்க்கப்படும். வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அவற்றில் நம்பர் பிளேட்டுகளைப் பொருத்திவிடும். அதில் எண்களைப் பொறிக்கும் பணி பின்னர் எந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தப் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நம்பர் பிளேட்டுகளால் நுகர்வோருக்கு அலைச்சல் குறைவதோடு நம்பர் பிளேட்டுகளில் சமச் சீரான தன்மையும் ஏற்படும். தற்போது மாநிலங்கள் கொள்முதல் செய்யும் நம்பர் பிளேட்டுகளின் விலை ரூ.800 முதல் ரூ.40,000 வரை உள்ளது. வாகனங்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்போம். விலை குறைந்த வாகனங்களாக இருந்தாலும், ஆடம்பர வாகனங்களாக இருந்தாலும் பாதுகாப்பு அம்சங்களில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்படாது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு தயாரிக்கப்படும் கார்களில் ஓட்டுநர்களின் பாதுகாப்புக்காக காற்றுப் பைகள், சீட்பெல்ட் அணிய வேண்டியதை நினைவுபடுத்தும் கருவி, மணிக்கு 80 கி.மீ வேகத்தைத் தாண்டி வாகனத்தை ஓட்டினால் எச்சரிக்கும் கருவி போன்றவற்றைக் கட்டாயம் பொருத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வாகனங்களால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்த விரைவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.