^இனி இருட்டிலும் போட்டோ எடுக்கலாம்!

Published On:

| By Balaji

குறைவான வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை எடுக்கும் ‘நைட் ஸைட்’ சேவையை கூகுள் நிறுவனம் அதன் சொந்தப் படைப்பான பிக்ஸல் ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்துள்ளது.

இணையதள சர்ச் இஞ்ஜின் சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் கூகுள் நிறுவனம் 2013ஆம் ஆண்டு பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஆண்டுக்கான பிக்ஸல் 3 ஸ்மார்ட்போன் வரும் 18ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. இந்த போனில் குறைவான வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை எடுக்கும் ‘நைட் ஸைட்’ என்னும் சேவை உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இதன் முந்தைய வாடிக்கையாளர்கள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் 2 சீரிஸ்களிலும் இந்த சேவையினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ML (Machine Learning) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறைவான வெளிச்சத்தில் எடுக்கக்கூடிய புகைப்படத்தில் நிறங்களைச் சமன்படுத்தி இயற்கையான புகைப்படத்தைப் போன்றே காட்சியளிக்கச் செய்வது இந்த ‘நைட் ஸைட்’ வசதியின் சிறப்பம்சமாகும். முந்தைய வாடிக்கையாளர்களுக்குப் புதிய கேமரா அப்டேட் இன்னும் ஒருசில நாட்களில் வெளியிடப்படும் என்று கூகுள் நிறுவனம் அதன் ப்ளாக்கில் தெரிவித்துள்ளது.

**பிக்ஸல் போனில் ‘நைட் ஸைட்’ சேவையைப் பெறுவது எப்படி?**

* முதலில் கூகுள் பிக்ஸல் போனில் உள்ள கேமராவை திறந்து கொள்ள வேண்டும்.

* அதில் ‘More’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் நிறைய ஆப்ஷன்கள் தோன்றும்.

* அதில் ‘Night Sight’-ஐ தேர்வு செய்ய வேண்டும்.

* பின்னர் வெளிச்சம் குறைவான இடத்திற்குச் சென்று புகைப்படம் எடுத்தால், அதில் வெளிச்சம் குறைவான இடங்களில் அதுவே வெளிச்சத்தை உண்டாகிவிடும்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share