இந்திய வம்சாவளி எழுத்தாளரின் கதை ஹாலிவுட்டில்!

public

1997இல் வெளியான திரைப்படம் Mrs.Brown. குயின் விக்டோரியாவின் உதவியாளராக இருந்த ஜான் பிரவுனின் மனைவியை (சித்தரிப்பு கதாபாத்திரம்) மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது. ஜான் பிரவுனுக்குப்பிறகு குயின் விக்டோரியாவின் நெருக்கமான, நம்பிக்கைக்குரிய உதவியாளர்களில் ஒருவராக இருந்த, இந்தியாவைச் சேர்ந்த அப்துல் கரீமைப் பற்றிய புத்தகம் Victoria and Abdul. விக்டோரியாவின் காலத்தில் இந்திய உதவியாளர்களாக இருந்தவர்களில் முக்கியமான அப்துல் கரீமைப்பற்றியும், அவருக்கும் விக்டோரியாவுக்குமிடையே இருந்த நல்லுறவுபற்றியும் புத்தகமாக எழுதியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் ஷரபனி பாசு. தனது புத்தகம் திரைப்படமாக எடுக்கப்படுவதுகுறித்து மகிழ்ச்சியில் இருக்கும் ஷர்பனி, ‘எனது புத்தகம் நல்ல கைகளில் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சியாக இருக்கிறது. விக்டோரியாவாக ஜூடி டென்ச் (Mrs.Brown படத்தில் விக்டோரியாவாக நடித்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்), ஸ்டீஃபன் ஃப்ரியர்ஸ் இயக்கத்தில், லீ ஹால் திரைக்கதையில் உருவாகப்போகும் படத்தைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. வருடக்கணக்கில் அமர்ந்து எழுதிய மறக்கப்பட்ட வரலாற்றை மக்களுக்குக் கொண்டுசெல்லும் இந்தப்பணி பாராட்டத்தக்கது’ என்று கூறியிருக்கிறார்.

குயின் விக்டோரியாவின் வாழ்வில், ஜான் பிரவுனுக்குப்பிறகு வந்த அப்துல் கரீம் மிகவும் முக்கியமானவர். அப்துலின் அறிவாற்றல் விக்டோரியாவைக் கவர்ந்ததோடு, மற்ற நாட்டு உதவியாளர்களின் கோபத்தையும் பெற்றுத்தந்தது. விக்டோரியாவுடன் எப்போதும் இருக்குமளவுக்கு முக்கியத்துவம்பெற்ற அப்துல் கரீம், விக்டோரியாவின் இறப்புக்குப்பிறகு இந்தியா வந்து விக்டோரியா அவருக்குப் பரிசாக அளித்த இடத்தில் வாழ்ந்து 46ஆவது வயதில் மரணமடைந்தார். ஆனால், விக்டோரியாவுடன் அவர் இருந்த 15 ஆண்டுகள் விக்டோரியாவின் வரலாற்றில் மிக முக்கியமானவை.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *