20 ஓவர் உலக கோப்பை போட்டித் தொடருக்காக அண்மையில் இந்தியா வந்த பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி, விமான நிலையத்தில் சகஜமாக பாகிஸ்தானைவிட இந்திய ரசிகர்களிடமிருந்து அதிக அன்பைப் பெறுவதாகக் கூறினார். உடனடியாக, இங்குள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரைப் போல் பாகிஸ்தானில் உள்ள சில அமைப்பினர் அப்ரிடியை ‘தேச விரோதி’ என்றும் ‘இந்தியாவின் கைக்கூலி’ என்றும் விமர்சனம் செய்தனர். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மியாந்தத், ‘உனக்கு வெட்கமாக இல்லையா’ என்றுகூறி, அப்ரிடிக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், இதற்காக லாகூர் உயர்நீதிமன்றத்தில் அசார் சித்திக் என்ற வழக்கறிஞர் அப்ரிடிமீது வழக்கு தொடர்ந்தார். இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்ரிடிக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், இந்திய ரசிகர்களைப் புகழ்ந்ததற்கான காரணம் குறித்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.�,
இந்திய ரசிகர்களைப் புகழ்ந்த அப்ரிடிக்கு லாகூர் நீதிமன்றம் நோட்டீஸ்
+1
+1
+1
+1
+1
+1
+1