இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று (ஜூன் 4) நடக்கிறது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் முதல் போட்டி நடைபெற்றபோது மழை குறுக்கிட்டு போட்டி தடைப்பட்டதற்கு ஒரு ரசிகர் **மழையே தயவுசெய்து 4ஆம் தேதி வந்துவிடாதே** எனப் பதிவிட்டது இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் போட்டியின் எதிர்பார்ப்பைக் காட்டியுள்ளது. அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு கொண்ட இந்தப் போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், முன்னணி வீரர்கள் அஃப்ரிடி, மெக்ரத் ஆகியோர் தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறும்போது, **சமீபத்திய கிரிக்கெட் போட்டிகளில் செயல்பாடு மற்றும் நீண்ட பேட்டிங் வரிசை போன்ற இரு காரணங்களும் சாதகமாக இருப்பதால் போட்டியில் வெல்ல பாகிஸ்தானைவிட இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு இருக்கிறது** எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெக்ரத் பேசியபோதும், “இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெறும். ஆனால், ஆஸ்திரேலிய அணிதான் இந்த முறை சாம்பியன்ஸ் பட்டம் வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
�,”