இழப்புகளையும் தாண்டி அமேசான் நிறுவனம் இந்தியாவில் அதிக கவனம் செலுத்தவுள்ளது.
அமேசான் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். இது இந்தியாவிலும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தன் நுகர்வோர் வளையத்தை பலப்படுத்திக் கொண்டுள்ளது. மேலும் உலகத்திலேயே பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உள்ளது. ஆனால் அமேசானின் சர்வதேச வியாபாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவால் அந்நிறுவனத்துக்கு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 723 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் அமேசானுக்கு இந்தியாவால் 135 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.
இந்தியாவால் அமேசான் நிறுவனத்துக்கு அதிகளவில் இழப்புகள் ஏற்படுகிறது. அமேசானின் சர்வதேச வியாபாரத்தில் 77 சதவிகித இழப்பு இந்தியாவால் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவை முக்கிய இலக்காகக் கொண்டு அமேசான் நிறுவனம் செயல்படுகிறது. அமேசானின் நிறுவனல் ஜெஃப் பெசாஸ் இந்தியாவில் 500 கோடி டாலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார். 2017ஆம் ஆண்டு தொடங்கியது முதல், அமேசான் விற்பனை சேவைகள் மற்றும் அமேசான் மொத்தவிற்பனையில் 2,120 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தகவல் மற்றும் கிளவுட் சேவைகளில் 1,382 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இழப்புகளையும் தாண்டி, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான அமேசான், இந்தியாவை முக்கிய இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.�,