மேற்கத்திய நாடுகளில் பாதுகாப்புவாதம் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும், உலகமயமாதல் மற்றும் அதிகமான அந்நிய முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவற்றிலேயே இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி ஆயோக் சி.இ.ஒ. அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிதி ஆயோக் தலைமை செயலதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில், ‘வளர்ந்துவரும் நாடான இந்தியா 9 சதவிகித பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியது மற்றும் புதிய அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் பாதுகாப்புவாதம் குறித்து பேசிவருவதையும் கண்டுள்ளோம். ஆனால் இந்தியா உலகமயமாதல்மீதே நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா ஆர்வமாகவும் தீவிரமாகவும் உள்ளது.
சர்வதேச அளவில் அந்நிய நேரடி முதலீடு 16 சதவிகிதம் சரிவுகண்டபோதிலும், இந்தியா 60 சதவிகித உயர்வுடன் அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. வரும்காலங்களில் மொபைல்போன் மற்றும் பயோமெட்ரிக் சார்ந்த அம்சங்கள் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் பெற்றிருக்கும். சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறைந்த பட்ஜெட்டில் திட்டங்களைச் செயல்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கென பிரத்யேகமான வலைதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.�,