இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில் அரசு மருத்துவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த அரசு மருத்துவரான லில்லி உரிய அனுமதி இல்லாமல் வெளிநாட்டில் அதிக நாட்கள் தங்கி இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து 2006ஆம் ஆண்டு லில்லி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்து லில்லிக்கு ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் எனக் கூறி லில்லியின் கணவர் அலெக்சாண்டர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு நேற்று (ஜூலை 19) நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு மருத்துவரான லில்லி அதிகநாள் வெளிநாட்டிலிருந்தது நிரூபனமாகியுள்ளது. இதனால் அவர் மீது அரசு எடுத்த நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மேலும் தனது உத்தரவில், இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும்போது, அரசு மருத்துவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதைத் தடுக்க அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்றும் கடமையைத் தவறும் அரசு ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”