இந்தியாவில் பழங்குடியினருக்குக் கழிப்பறைகள் இல்லை

public

இந்தியாவிலுள்ள பழங்குடியினரில் 75 விழுக்காட்டினருக்குக் கழிப்பறைகள் இல்லை என குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் ரமேஷ் சந்தப்பா ஜிகாஜிநகி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது ரமேஷ் சந்தப்பா கூறியதாவது… “இந்தியாவிலுள்ள பழங்குடியினர் 27 விழுக்காட்டினருக்குக் குடிநீர் வசதிகள் இல்லை. 75 விழுக்காடு பழங்குடியினரின் வீடுகளில் கழிப்பறை வசதிகள் இல்லை. மத்திய அரசு, கிராமங்களிலுள்ள வீடுகள் அனைத்திலும் கழிப்பறைகள் அமைக்க முயற்சிகளை எடுத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0