^இந்தியாவின் பிரபலமான பிராண்டு எது?

Published On:

| By Balaji

fஇந்தியாவின் மிகவும் பிரபலமான பிராண்டுகளில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள *பிராண்டு ஆசியா* ஆய்வறிக்கையில், ‘இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிதாக நுழைந்த ஜியோ நிறுவனம் இந்தியாவின் மிகவும் பிரபலமான பிராண்டுகளில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளது. இந்தியத் தொலைத் தொடர்பு துறையில் மிகக் குறைவான கட்டணத்துக்கு இலவச வாய்ஸ் கால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை வழங்கி ஒட்டுமொத்த துறையையும் ஆட்டம்காண வைத்த ஜியோவுக்கு இந்தியாவின் மிகவும் பிரபலமான பிராண்டுகளின் பட்டியலில் 8ஆவது இடம் கிடைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தை சாம்சங் நிறுவனத்தின் மொபைல்போன் பிரிவு பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை அதே நிறுவனத்தின் மின்னணு தயாரிப்புப் பொருட்கள் பிரிவு பெற்றுள்ளது. வாட்ஸ் அப் செயலி 3ஆவது இடத்தையும், அமுல் 4ஆவது இடத்தையும், பெப்சி 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக்குக்கு இந்தியாவின் மிகவும் பிரபலமான பிராண்டுகளின் பட்டியலில் 6ஆவது இடம் கிடைத்துள்ளது. 7ஆவது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கோக கோலா நிறுவனமும், 9ஆவது இடத்தில் பிக் பஜார் நிறுவனமும், 10ஆவது கோல்கேட் நிறுவனமும் உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் செயல்பாடுகள், வசதிகள், அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 6,780 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share