இந்தியர்களைக் கவர விவோ பயன்படுத்தும் புது உத்தி!

public

இந்தியர்களின் உணர்வுகளைச் சரியாக புரிந்துகொண்டு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வேரூன்றி நிற்கும் சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம், தற்போது சுதந்திர தினத்தன்று மேலும் ஒரு புது உத்தியைக் கையாளத் திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.44,990 மதிப்புள்ள விவோ நெக்ஸ் மொபைலை ரூ.1947க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டைக் குறிப்பதற்காக 1947-ஐ பயன்படுத்தியுள்ளது.

ஃப்ளாஷ் விற்பனை முறையில் விவோ நிறுவனம் இந்த ஆஃபரை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் சரியாக 12 மணியளவில் இந்த ஃப்ளாஷ் விற்பனை அதன் இணையதளத்தில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 7அன்று தொடங்கிய இந்த விற்பனை ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சரியாக 10 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்தச் சலுகையில் முதலில் புக் செய்யும் வாடிக்கையார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகையுடன் விவோ நிறுவனத்தின் மற்ற பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அதிரடித் தள்ளுபடி, கூப்பன்கள், கேஷ்பேக் சலுகைகள் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது.

**ஃப்ளாஷ் விற்பனையில் உள்ள மற்ற பொருட்கள்**

இத்துடன் விவோ V9 ஸ்மார்ட்போனை ரூ.1947க்கும், விவோ XE100 ஹெட்செட், விவோ USB கேபிள்கள், விவோ ப்ரீமியம் ஹெட்செட் ஆகியவற்றை தலா ரூ.72க்கும் விற்பனை செய்கிறது.

**விவோ நெக்ஸ் சிறப்பம்சங்கள்**

6.9 இன்ச் HD டிஸ்ப்ளே; ‘அல்ட்ரா ஃபுல் வியூ’ திரையுடன் வரும் இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது. தனியாக மேலே நீளும் வகையில் உள்ள பாப் அப் செல்ஃபி. 8 MP கேமரா, ஏ.ஆர் ஸ்டிக்கர்கள் மற்றும் ஃபேஸ் பியூட்டி அப்ளிகேஷனும் உடன் வருகிறது. 12 MP டூயல் பின்புற கேமராவும் உள்ளது. 128 GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஃபோனில், மைக்ரோ SD ஸ்லாட் இல்லை. 845 ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராஸசரும், 8 GB ரேமும் இணைந்து வேகத்தை அதிகரிக்கின்றன.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *