[இதெல்லாம் ஒரு பெருமையா ஹாட்ஜ்சன்!

Published On:

| By Balaji

யூரோ 2016 போட்டியில் ரஷியாவுடன் மோதிய இங்கிலாந்து அணி, அதிர்ச்சிகரமான ‘டிரா’-வை சந்தித்தது. ஆட்டம் தொடங்கியதிலிருந்தே ஒருவரை மாற்றி ஒருவர் டிஃபன்ஸ், கவுன்டர் அட்டாக் என பல்வேறு யுக்திகளைக் கையாண்டு விளையாடி வந்தாலும் 73-வது நிமிடம் வரை எந்த மாறுதலும் இல்லை. ஆனால் 73-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் மிட் ஃபீல்டர் எரிக் டையர் உதைத்த ஃப்ரீ கிக் பந்து கோல் கம்பத்துக்குள் விழுந்து இங்கிலாந்துக்கு முன்னேற்றத்தைக் கொடுத்தது. எரிக் டையர் கோல் அடித்த மூன்றாவது நிமிடத்தில் இங்கிலாந்தின் நட்சத்திர ஆட்டக்காரரான வெய்ன் ரூனியை களத்திலிருந்து வெளியேற்றினார், இங்கிலாந்தின் ஓனர் ராய் ஹாட்ஜ்சன். இந்தச் சம்பவம் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. அதன்பிறகு தொடங்கிய ஆட்டத்தில் கடைசி எக்ஸ்ட்ரா டைமில், கார்னரிலிருந்து பறந்துவந்த பந்தை ரஷியாவின் பெரேசுட்ஸ்கி தலையில் முட்டி கோலாக்கினார். ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

ரூனியை களத்திலிருந்து நீக்கியதை பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். ‘எப்படியாவது சமாளித்துவிட வேண்டும் என்பதற்காக சிறப்பான ஆட்டக்காரரான ரூனி, நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அந்த சூழ்நிலை மிகவும் மோசமானதால் சோர்வாக காணப்பட்டார். அதனால் மாற்றினோம்’ என்று கம்பு சுத்தினார். ரூனியின் ஆட்டத்தைப் பார்த்துவரும் அடிப்படை ரசிகனுக்குக் கூடத் தெரியும், ரூனி எத்தனை அபாயகரமான ஆட்டக்காரர் என்று. அதிலும் போட்டியின் கடைசி நொடி வரை சிறுத்தையைப் போல், அங்கும் இங்கும் ஓடிவரும் அந்த அபாயகரமான ஆட்டக்காரனை ஒரு கோல் முன்னிலையில் இருந்ததற்காக வெளியேற்றியது மிகவும் தவறான முடிவு என்பது ராய் ஹாட்ஜ்சனுக்கும் தெரிந்திருக்கும். ‘கடைசி நிமிடம் வரை வெற்றி தோல்வி ஃபுட்பாலில் கணிக்க முடியாதது’ என பேட்டி கொடுத்திருப்பவர் வெற்றி பெற்றுவிடுவோம் என சொல்லிவிட்டு ரூனியை மாற்றியதாக இங்கிலாந்து ஃபுட்பால் அகாடெமிக்குள்ளே ஒரு பரபரப்பு உண்டாக்கிவிட்டது. ராய் ஹாட்ஜ்சனின் தவறான முடிவால், யூரோ போட்டியின் முதல் ஆட்டத்தில் இதுவரை வெற்றி பெற்றதே இல்லை என்ற பெருமையை இந்த வருடமும் பெற்றுவிட்டது இங்கிலாந்து அணி.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel