பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வரும் பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய புத்தகம் வெளியாகவுள்ளது.
17 வயதில் இந்திய அழகி பட்டமும் அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் உலக அழகி பட்டமும் பெற்று திரைத் துறையில் நுழைந்தவர் பிரியங்கா சோப்ரா. தற்போது 35 வயதிலும் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம்வருகிறார். ஹாலிவுட்டிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து அங்கும் தனக்கான ரசிகர் கூட்டத்தைப் பெற்றுள்ளார்.
பிரியங்கா தான் எதிர்கொண்ட சவால்கள், அனுபவங்களைக் கட்டுரைகளாகவும் கதைகளாகவும் பதிவு செய்துள்ளார். இந்தத் தொகுப்பு ‘அன்பினிஷ்டு’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவரவுள்ளது. பென்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை அடுத்த ஆண்டு ஒரே நேரத்தில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வெளியிடுகிறது.
2017ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பென்குயின் பதிப்பகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரியங்கா பேசினார். அப்போது கூட்டத்தினரைக் குறிப்பாக இளம் பெண்களை பிரியங்காவின் பேச்சு ஈர்த்தது. இதை அந்தப் பதிப்பகத்தின் ஆசிரியர் மெரு கோகலே கவனித்துள்ளார். பெண்களுக்கான சிறந்த வழிகாட்டிகளின் புத்தகங்களை தொடர்ந்து பதிப்பித்து வரும் அந்தப் பதிப்பகம் பிரியங்காவின் புத்தகத்தை வெளியிடுவதற்கு அந்த நிகழ்ச்சி முக்கிய காரணமாக இருந்துள்ளது.�,