ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவிலும் வருமான வரித்தாக்கல் நடைபெறும். ஆரம்பத்தில் வருமானவரித் துறை அலுவலகத்திற்கு சென்று தான் சமர்ப்பிக்க வேண்டும்.தற்போது இணையம் வழியாகவும் சமர்பிக்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் இந்த வரித்தாக்கலின்போது, உங்கள் வங்கிக்கணக்கை சரி பார்க்க வேண்டும் என்று வருமானவரித்துறையின் இணையதளம் கேட்கும்.இதற்கு ஆன்லைன் பேங்கிங் வசதி தேவை. ஆனால், இந்தியாவில் எல்லா வங்கிகளுமே ஆன்லைன் பேங்கிங் வசதி அளிப்பதில்லை. எனவே, பலரும் தங்களது வங்கிக் கணக்கை இணைக்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்தச் சிரமத்தை சரிசெய்யும்விதமாக இனி ஏடிஎம்-மின் மூலமாகவும் வங்கிக் கணக்கை சரிபார்க்கலாம் என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியானது, இந்தச் சேவையை நேற்று முதல் தொடங்கியது. மற்ற வங்கிகள் விரைவில் இந்தவகை சேவையைத் தொடங்கும் என்று தெரிகிறது.�,
இணையவழி வருமானவரித் தாக்கல்: ஏடிஎம் மூலம் வெரிஃபை!
+1
+1
+1
+1
+1
+1
+1