இந்தியாவில் இன்னும் இணையதளம் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகத்தான் இருக்கிறது. ஏனெனில், இணையப் பயனாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினரே பெண்களே. டிஜிட்டல் மயமான பாலின பிளவு பெண்களுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
யூனிசெப் அமைப்பு என்று அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியக்குழு உலகம் முழுவதும் இணையதளம் பயன்பாடு தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று நேற்று (டிசம்பர் 12) வெளியிட்டுள்ளது. அதில், பெண்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அணுக முடியாது என்றால், நாட்டில் பெண்கள் சமூக – கலாசாரத் துறையில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நகர்ப்புறங்களில் இணையப் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனுடைய வளர்ச்சி அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக அதிகம். கிராமப்புறங்களில் பெண்களுக்கு இதுபோன்ற தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்படும். ராஜஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் செல்போன் அல்லது சமூக வலைதளங்கள் பயன்படுத்தக் கூடாது. அதுபோன்று, உத்தரப்பிரதேசத்தில் திருமணமாகாதவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டலில் இருந்து பெண்களுக்கு அளிக்கப்படும் விலக்கு, சுகாதார தொடர்பான பிரச்னைகளைத் தெரிந்து கொள்வது, 21ஆம் நூற்றாண்டின் உலகளாவிய பொருளாதாரத்தில் பெண்கள் பங்குபெற உதவக்கூடிய திறன்களை இழக்க நேரிடும்.
இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் டிஜிட்டல் உலகம் அளிக்கும் நன்மையைப் பெறுவதில் தனித்துவமான வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்தியாவில் ஐடி என்பது பிரபலமாக இருக்கிற ஒன்று. பெண்கள், ஆண்கள் எங்கு வாழ்ந்தாலும், டிஜிட்டலின் பயனை அடைய வேண்டும் என ஐ.நாவின் குழந்தைகள் நிதியக்குழு பிரதிநிதி யஸ்மின் அலி ஹேக் தெரிவித்துள்ளார்.
உலகளவில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். சிறுவர்களுக்குத் தேவையான அறிவுபூர்வமான தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் இணையதளத்தில் கிடைக்கின்றன. அதேநேரத்தில் சிறுவர்கள் மனதைத் தவறான பாதையில் திசைமாற்றம் செய்யும் தீங்குகளும் இடம் பெற்றுள்ளது, இணையத்தளத்திலும் சமத்துவமின்மை அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த மற்றும் மோசமான டிஜிட்டல் தொழில்நுட்பம் தற்போது நம் வாழ்வில் ஒரு திரும்பப்பெற முடியாத ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் இணையத்தின் மூலம் நலன்களை அதிகரிக்கும்போது தீங்குகளை எப்படிக் குறைப்பது என்பது நமக்கு இரட்டை சவாலாக இருக்கிறது என யுனிசெப் நிர்வாக இயக்குநர் அந்தோணி லேக் கூறினார்.�,