குரூப் 4 முறைகேட்டில் முக்கிய இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயக்குமாரைப் பிடிக்க 3 மாநிலங்களுக்கு தனிப்படை விரைந்துள்ளது.
குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இதுவரை லட்சக் கணக்கில் பணம் கொடுத்து அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்து வருகின்றனர். இதில் ரூ.15 லட்சம் வரை லஞ்சம் பெற்று பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்த இடைத்தரகரான முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் தலைமறைவாக உள்ளார்.
மற்றொரு இடைத்தரகரான எஸ்.ஐ சித்தாண்டியை போலீசார் கைது செய்த நிலையில் ஜெயக்குமாரைக் கைது செய்வது என்பது சிபிசிஐடிக்கு சவாலாக அமைந்துள்ளது. அவரை கைது செய்ய போலீசார் பல யூகங்களை கடைப்பிடித்து வருகின்றனர். வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களைக் கண்காணித்து வந்தனர். அவருடைய டிஜிட்டல் தடயங்களையும் கண்காணித்து வந்தனர். நேற்று அவருடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயக்குமார் அண்டை மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சிபிசிஐடி தனிப்படை விரைந்துள்ளது.
முன்னதாக ஜெயக்குமார் குறித்து தகவல் அளிப்போருக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும் என்று சிபிசிஐடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
[குரூப் 4 முறைகேடு: சிபிசிஐடியிடம் சிக்கிய துண்டு சீட்டு ஆதாரங்கள்!]( https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/02/02/49/group4-scam-cbcid-investigation-mediater-jayakumar)�,