சமீபகாலமாக தென்னிந்திய மீடியாக்களின் ஹாட் டாபிக், நடிகை பார்வதி சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்பதுதான். டேக் ஆஃப் திரைப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றியைத் தொடர்ந்து பார்வதி சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்ற தகவல் வேகமாகப் பரவியது. இதனையறிந்த பார்வதி, தனது ஃபேஸ்புக் அக்கவுண்டில் மிக நீண்ட டிஜிட்டல் கடிதம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
அதன் சாராம்சம், **உங்களுக்கு செய்தி இல்லை என்பதால் எனக்கு சம்பளம் உயர்ந்துவிட்டதாக வதந்தியைப் பரப்புவது எந்தவிதத்தில் நியாயம். என்னை எந்த மீடியாவோ அல்லது செய்தி ஏஜென்ஸியோ தொடர்புகொள்ளவில்லை. சோர்ஸ் என்ற பெயரில் நீங்களாக எதையாவது எழுதினால் அது உண்மையாகிவிடுமா? என் சம்பளத்தைப் பற்றி கவலைப்படவேண்டியது நானும் தயாரிப்பாளரும்தான். இந்த மாதிரியான பொய்யான செய்திகளை வெளியிடுவதை நிறுத்துங்கள். உங்கள் தரத்தை உயர்த்துங்கள். எனக்கு உங்கள்மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் நேர்மையாக இருக்க நினைக்கும் மக்கள் நாங்கள்**
**ஆழ்ந்த ஏமாற்றத்துடன்**
**P(பார்வதி)**
இப்படி ஒரு கறார் கடிதத்தை வெளியிட்டு, தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். பார்வதி இத்தனை கோபப்படுமளவுக்கு இந்தச் சம்பவம் சீரியசானதா? என ஒதுக்கிவிட முடியாது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு இணையானவை, மலையாளத் திரையுலகில் உருவாகும் படங்களின் பட்ஜெட்கள். உதாரணத்துக்கு, ரஜினிக்குக் கொடுக்கும் சம்பளத்தில் 10 முதல் 15 படங்களை மலையாளத்தில் எடுத்துவிடலாம். அந்தளவுக்கு குறைந்த பணத்தையும், அதிக தரத்தையும் கொண்டு உருவாகும் மலையாளத் திரையுலகில் பார்வதி முக்கியமான நடிகை. சமூகக் கருத்துள்ள ஒரு பெண் கேரக்டருக்கு ஆர்ட்டிஸ்ட் தேவை என்றால், தங்களது கதாபாத்திரம் வலுவானதாக இருக்கும்பட்சத்தில் எவ்வித யோசனையும் இல்லாமல் பார்வதியிடம் சென்று நிற்பார்கள் இயக்குநர்கள். அதிகச் சம்பளம் கேட்காமல், கேரக்டருக்காக மட்டும் நடித்துக் கொடுக்கும் நடிகையைப் பற்றி, சம்பளம் உயர்த்திவிட்டதாக செய்தி வெளியானால், இயக்குநர்கள் வேறு நடிகையை தேடிச் சென்றுவிடுவார்கள் என்பதால் இவ்வளவு கோபப்பட்டிருக்கிறார் பார்வதி.
�,”