ஆள்வோருக்கு ஆதரவு சர்ச்சை: தேர்தல் ஆணையர் பதில்!

Published On:

| By Balaji

தேர்தல் ஆணையத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக இன்று (மே 18) செய்திகள் வெளியானது தேவையற்ற சர்ச்சை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா மீதான தேர்தல் விதிமீறல் புகார்களில் தன்னுடைய முடிவுகள் ஏற்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு மே 4ஆம் தேதி கடிதம் அனுப்பியதாகவும், ”இந்த ஆணையத்தில் நான் இருப்பது அர்த்தமற்றதாக உள்ளது. எனவே இனி தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை” என்று அதில் கூறியிருந்ததாகவும் இன்று செய்தி வெளியானது.

”எலக்சென் கமிசனா? அல்லது எலெக்சன் ஒமிசனா (தவிர்ப்பது)? இது ஜனநாயகத்தின் மற்றுமொரு கருப்பு நாள்” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, அசோக் லவாசா விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுனில் அரோரா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இன்று (மே 18) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேர்தல் ஆணையர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வந்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. நாளை இறுதிகட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. 23ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன. தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனைவரும் அதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஒளிவுமறைவு இன்றி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டி வருகிறோம். 3 பேரைக் கொண்ட தேர்தல் ஆணையத்தில் 3 பேரும் ஒரே மாதிரியாக சிந்திக்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் தர்க்க ரீதியாக இருக்காது. கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். இதற்கு முன்பும் இதுபோன்ற முரண்பாடுகள் பலமுறை எழுந்துள்ளன. ஆனால் அவை ஒரு வரம்புக்குள் இருந்தன. பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எழுதப்பட்ட புத்தகங்களில் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொது விவாதம் ஒன்று தேவைப்படும்போது அதிலிருந்து எப்போதுமே நான் நழுவிக்கொண்டதில்லை. ஆனால் எல்லாவற்றுக்குமே ஒரு நேரம் உண்டு. தவறான நேரத்தில் சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது. மே 14ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 13 பிரச்சனைகள் குறித்து விவாதிக்க ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share