ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்!

public

ட்ராயின் புதிய கட்டண விதிமுறைகளை எதிர்த்து ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவை கட்டணம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 100 இலவச சேனல்களையோ, கட்டணம் செலுத்தி பெறப்படும் சேனல்களையோ ரூ.153.40 கட்டணத்தில் தேர்வு செய்து சேவையை பெற்றுக்கொள்ளலாம் என்று ட்ராய் தெரிவித்திருந்தது. ட்ராயின் புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி 10ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக கோயம்புத்தூர் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய கட்டணமாக மாதத்துக்கு ரூ.130 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரியுடன் சேர்ந்து மாதத்துக்கு ரூ.154 செலுத்த வேண்டும். புதிய அறிவிப்பின்படி ஜனவரி 31ஆம் தேதிக்குள் 10 சேனல்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்த சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்று ட்ராய் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. ட்ராயின் புதிய விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், ட்ராயின் புதிய விதிமுறைகளுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அனு பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 14 அன்று கேபிள் சேவையை நிறுத்தவுள்ளோம். கட்டணத்தைக் குறைக்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். வரும் பிப்ரவரி 10ஆம் தேதி எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முற்றுகையிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0