U
நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாய்ஷாவுக்கும் ஹைதராபாத்தில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.
நான் கடவுள், ராஜா ராணி, மதராசப்பட்டனம், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்யா. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து சக்தி சவுந்தரராஜன் இயக்கவுள்ள டெட்டி படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவர் நடித்த கஜினிகாந்த் படம் வெளியானது. அதில் ஆர்யாவுக்கு ஜோடியாக சாய்ஷா நடித்திருந்தார்.
சாய்ஷாவை ஆர்யாவின் குடும்பத்தாருக்கு பிடித்துப்போக, சாய்ஷாவின் குடும்பத்திடம் திருமணத்திற்காக அணுகினர். அவர்களும் சம்மதம் தெரிவிக்க, திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. ஆர்யாவும், சாய்ஷாவும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக பிப்ரவரி 14 (காதலர் தினம்) அன்று அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர். இந்நிலையில் இன்று காலையில் ஹைதராபாத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் திரையலக பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.�,