�
நடிகர் ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார் நடிகை ஓவியா.
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீஸனில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டவர்கள் நடிகை ஓவியாவும், நடிகர் ஆரவ்வும். ஏற்கெனவே சில படங்களில் இருவரும் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் வாயிலாக பட்டி தொட்டியெங்கும் பாப்புலர் ஆனார்கள்.
இந்நிகழ்ச்சியில் இருவரும் காட்டிய மருத்துவ முத்தம் உள்ளிட்ட சில நெருக்கங்கள் அந்த சீஸனின் முக்கிய பேசுபொருளாகின. பின்னர் போட்டியிலிருந்து திடீரென விலகி ஓவியா வெளிக்கிளம்ப கடைசிவரை போட்டியில் நீடித்த ஆரவ் பிக் பாஸ் சாம்பியன் ஆனார்.
இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்துவருவதாகக் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில் நடிகர் ஆரவ் தனது பிறந்தநாளை இன்று (அக்டோபர் 31) கொண்டாடிவருகிறார். அதையொட்டி ஆரவ்வின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார் ஓவியா. ஆரவ்வுடன் இணைந்து ஓவியா எடுத்துகொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆரவ் தற்போது ராஜபீமா படத்தில் கதாநாயகனாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.�,