ஆயுத பூஜையோட அர்த்தத்தையே மாத்திட்டாங்க! :அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

வீட்டில ஆயுத பூஜை கொண்டாடப் போறோம் ஆயுதத்த எல்லாம் எடுத்து கிளீன் பண்ணி வைங்கண்ணு வீட்ல அம்மா சொல்றாங்க. தேங்கா வெட்டுற கத்தி கூட பூஜை ரூம்ல தான் இருக்கு. அக்கா பொண்ணு ஜாலியா புக்க எல்லாம் கொண்டு வச்சிட்டு, மாமா உங்க ஃபோன கொஞ்சம் தாங்கன்னு கேட்டா. சரி கேம் தான் ஆடப்போறான்னு நெனச்சு ஃபோனைக் கொடுத்தா, தண்ணில முக்கியெடுத்து சூடத்துக்கு பக்கத்துல வெச்சு சாமி கும்புட வா மாமான்னு கூப்பிட்றா. அவள சொல்லியும் குத்தமில்ல. எங்கயோ ஒருத்தர் ஏடிஎம் மிஷினை கழுவி பூஜை போட்ருக்காப்லயாம். அப்போ கொழந்தைக்கு தோணாதா? சரி எப்போ பொரி, சுண்டல் எல்லாம் தருவிங்கன்னு கேட்டா மொதல்ல போய் வீட்ட கழுவி, ஒட்டட அடின்னு சொல்றாங்க. நான் போய் வேலைய பாக்குறேன். நீங்க அப்டேட்ட படிங்க

**ஜோக்கர்**

கைகளுக்கு சந்தனும், குங்குமமும் வைத்து ஆயுதபூஜையை கொண்டாடும் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை வேதனையுடன் இன்நன்நாளில் பதிவு செய்தாக வேண்டியுள்ளது.

**mohanram.ko**

அடுத்தவங்களோட ‘கையை, காலை பிடிச்சா தான்’ ஜெயிக்க முடியும், கபடி விளையாட்டில்

**ச ப் பா ணி**

வண்டியை வருசத்துக்கு ஒருமுறையாவது வாட்டர் சர்வீஸ் செய்ய வேண்டும் என கண்டுபிடிக்கப்பட்ட நாளே ஆயுதபூஜை

**உள்ளூராட்டக்காரன்**

வண்டி வாட்டர் வாஷ் பண்ண போனா, படையப்பா படத்துல இந்த தனி ஆள் பின்னாடி நிக்கிற கூட்டத்தை பார் கண்ணானு சொல்லும் போது நிற்குமே ஒரு லைன்

அது மாதிரி கூட்டம்

**ரமேஷ்.ஏ**

குடத்தில் சிக்கிக்கொண்ட குண்டு சொம்பை போல் என்னுள் சிக்கிக்கொண்டு வெளிவர மறுக்கிறாய்…!!

**பருத்தி மூட்டை**

குடும்ப பாரங்களை சுமக்கும் ஒவ்வொரு குழந்தைகளின் அழகான முகங்களுக்கு பின்னால் அறுவறுக்கத்தக்க பெற்றோர்களின் முகங்கள் தெரிகிறது

**ஆர்வக்கோளாறு**

வரும் சம்பளத்தில் முதல் செலவே ஈஎம்ஐக்கு கொடுக்கும் காலம் பணம்உதிர் காலம் ..!!

**amudu**

ஒரு காதல் தொடங்கும் போதும், ஒரு காதல் முடிவுறும் போது, அதிக ரத்தம் சிந்தியது, காதலர்களின் நண்பர்களின் காதுகளாகத் தான் இருக்கும்.

**குழந்தை. செல்வா**

நீ குளத்தில் இறங்கினால்தான் உன்னால் ஆழம் எவ்ளோ என கண்டறிய முடியும்..!

உனக்கான குளத்தை நீ தேடு..

உள்ளே குதி அப்புறம் பாரு..!

நாளை வரலாறு உன் பின்னால்

**м υ я υ g α η . м**

சரியான ஒன்றை சரியான நேரத்தில் சரியான நபரிடம் பேசவில்லையெனில் தேவையில்லாத மனக்குழப்பத்திற்க்கு ஆளாவோம்.!

**சவேதி**

ஒரு நேரத்தில்

ஒரே “எண்ணத்தை “

துரத்த முடிந்தவனால்…

நினைத்த

“இலக்கை ” விரைவில்

தொட்டு விட முடியும்

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share