d
ஆன்லைன் மருந்து வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
நெட்மெட், 1எம்ஜி, பார்ம்ஈசி போன்ற ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் விரைவில் ஒழுங்குமுறை ஆணையத்தின் கண்காணிப்பில் வரவுள்ளன. ஆன்லைனில் மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனங்களின் விற்பனையைக் கண்காணிப்பதற்கான விதிமுறைகளை மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனங்களை மருந்துகள் சட்டத்தின் கண்காணிப்பில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான வரைவறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, ஆன்லைன் மருந்து வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் தங்களைப் பதிவு செய்துகொண்டு, சரக்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்த முழுமையான தகவல்களைப் பராமரிக்க வேண்டும். ஆன்லைன் மருந்து வர்த்தக நிறுவனங்கள் ஒழுங்குமுறை ஆணையத்தால் அவ்வப்போது சோதனையும் செய்யப்படும். இந்நிறுவனங்களின் வாயிலாக தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.�,